ஒரே கிணற்றில் 4 மாணவிகள் குதித்து தற்கொலை : வேலூர் அதிர்ச்சி

வேலூர் மாவட்டம், அரக்கோணம் அருகே அரசுப் பள்ளி மாணவிகள் 4 பேர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

vellur district, 4 girls suicide, 4 students fell down into a well, panapakkam government higher secondary school

வேலூர் மாவட்டம், அரக்கோணம் அருகே அரசுப் பள்ளி மாணவிகள் 4 பேர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

வேலூர் மாவட்டம், அரக்கோணம் அருகே ராமாவரத்தை சேர்ந்த மாணவிகள் தீபா, சங்கரி, மணீஷா, ரேவதி. இவர்கள் பணப்பாக்கம் அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தனர்.

மேற்கண்ட 4 மாணவிகள் இன்று மாலையில் ராமாவரத்தில் உள்ள 60 அடி ஆழ கிணற்றில் குதித்தார்கள். அவர்களில் தீபா, சங்கரி ஆகியோரின் உடல்களை தீயணைப்பு படையினர் மீட்டனர். 4 மாணவிகளும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது.

மணிஷா மற்றும் ரேவதி உடல்களை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மீட்புப்பணிக்காக அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் சென்றுள்ளனர்.

பலியான மாணவிகளின் சடலங்களை கண்டு பெற்றேர்கள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது நெஞ்சை கரைய வைக்கும் விதமாக இருந்தது. ஆசிரியர்கள் திட்டியதாலும், பெற்றோர்களை பள்ளிக்கு அழைத்து வர வேண்டும் என்று கூறியதாலும் மாணவிகள் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vellur district government school 4 girls fell into a well suicide

Next Story
பெங்களூரு சிறையில் பதிவான ஜெயலலிதா கைரேகை ஆவணங்கள் : தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவுjeyalalitha, chennai high court, bengaluru parappana agrahara jail, jeyalalitha wealth case, jeyalalitha thumb impression, thirupparamkuntram election
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express

X