சென்னை வந்தார் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு

குடியரசுத் துணைத் தலைவராக பதவியேற்றதும் முதன் முறையாக சென்னை வந்துள்ள வெங்கையா நாயுடுவை, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துப் பேசவுள்ளார்.

Venkaiah naidu

குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சென்னை வந்தடைந்தார்.

வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைந்ததை யொட்டி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தொடங்கி வைக்கிறார். அதன்பின்னர், அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் அவர் கலந்துரையாடுகிறார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி திருச்சியில் உள்ளதால், விமான நிலையத்தில் வெங்கையா நாயுடுவை துணை முதல்வர் பன்னீர்செல்வம், ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஆகியோர் வரவேற்றனர்.அப்போது பாஜக தலைவர்கள் தமிழிசை, இல.கணேசன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

குடியரசுத் துணைத் தலைவராக பதவியேற்றதும் முதன் முறையாக சென்னை வந்துள்ள வெங்கையா நாயுடுவை, ஆளுநர் மாளிகையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துப் பேசவுள்ளார். இந்த சந்திப்பில் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vice president venkaiah naidu reaches chennai

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com