காந்தி பேரன் எனக்கூறி ஓட்டு கோட்டால் கேவலமானது: கோபால கிருஷ்ணகாந்தி

அப்படி கூறிக் கொண்டு ஓட்டு கேட்டால் எனக்கு யாரும் வாக்களிக்கக் கூடாது. நான் அதுபோல வாக்களிக்க வேண்டும் என கேட்க மாட்டேன்.

காந்தி பேரன் எனக்கூறி ஓட்டு கோட்டால், அது தவறானது மட்டுமல்லாமல் கேவலமானதும் கூட என துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் கோபாலகிருஷ்ணகாந்தி தெரிவித்துள்ளார்.

துணை குடியரசுத் தலைவராக உள்ள ஹமீது அன்சாரியின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் மாதத்தில் முடிவடைகிறது. இதைத்தொடர்ந்து அப்பதவிக்கான தேர்தல் ஆகஸ்ட் 5-ல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. எதிர்கட்சிகளின் சார்பில் கோபாலகிருஷ்ண காந்தி, குடியரசுத் தலைவர் வேட்பாளர் பதவிக்கு போட்டியிடுகிறார். இதையடுத்து, நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தனக்கு ஆதரவு கோரி வருகிறார் கோபாலகிருஷ்ணகாந்தி.

கோபாலகிருஷ்ணகாந்தி புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அளித்த பிரத்யேக பேட்டியின் போது கூறியதாவது: நான் எந்தக் கட்சியையும் சார்ந்திருக்கவில்லை. அரசிலிலும் சேர்ந்ததில்லை. தற்போது நான் பொதுமக்களின் வேட்பாளராக களம் இறங்கியிருப்பதாகவே கருதுகிறேன்.

தேர்தல் மூலமாக தான் துணைக் குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். , இந்த பதவி என்பது அரசியல் கட்சிளுக்கு அப்பாற்பட்டது. திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து, எனக்கு ஆதரவுக்கு தெரிவித்ததற்கு நன்றி தெரிவித்தேன்.

மேலும், அதிமுக-வின் ஆதரவை கோரியிருக்கிறேன். இது தொடர்பாக முதலமைச்சருக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். எனக்கு திமுக மற்றும் அதிமுக-வின் ஆதரவு கிடைத்தால் வரவேற்பேன்.

காந்தி பேரன் எனக்கூறி ஓட்டு கோட்டால், அது தவறானது மட்டுமல்லாமல் கேவலமானதும் கூட. அதுபோல ஓட்டு கேட்டால் எனக்கு யாரும் வாக்களிக்கக் கூடாது. நான் அதுபோல வாக்களிக்க வேண்டும் என கேட்க மாட்டேன்.

நான் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளது பாஜக-வுக்கும் தெரியும். நான் துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளது சரி என்று தோன்றினால், பாஜக அது குறித்து முடிவு செய்யட்டும் என்று கூறினார்.

×Close
×Close