'சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தானாம் ஆண்டி' என்ற வேடிக்கையான பழமொழி இன்று 'விஜய்' என்ற வடிவில் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.
நெய்வேலியில் யாருக்கும் தெரியாமல், சப்தமே இல்லாமல் நடந்து கொண்டிருந்த விஜய்யின் 'மாஸ்டர்' படப்பிடிப்பு இன்று மாநாடு களமாக மாறிவிட்டது. ரசிகர்கள் குடும்பம் குடும்பமாக வருவது தான் இதில் ஹைலைட்!.
மாஸ்டர் படப்பிடிப்பை காண கூடிய கூட்டம், தமிழகத்தில் சில கட்சிகளின் மாநாட்டிற்கே திரண்டிருக்குமா? என்பது சந்தேகமே.
இத்தனைக்கு காரணம் ஐடி ரெய்டும், அது அரசியலாக்கப்பட்ட விதமும்.
விஜய் மீதான ஐடி ரெய்டு குறித்தும், விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்தும் நம்மிடம் சில தகவல்களை பகிர்ந்துள்ளார் காஞ்சிபுர மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் பொறுப்பாளரும், காஞ்சிபுர மாவட்ட இளைஞரணித் தலைவருமான DR.ECR.P.சரவணன். இவற்றையெல்லாம் தாண்டி விஜய்யுடன் நேரடி தொடர்பில் இருக்கும் முக்கிய நிர்வாகிகளில் ஒருவர் இவர்.
விஜய் மீதான ஐடி ரெய்டு குறித்து பேசிய சரவணன், "அன்னைக்கு ரெய்டு நடந்தப்போ, தளபதி முழுசா சப்போர்ட் பண்ணார். ஆனா, அதிகாரிகள் தான் Rough-ஆ நடந்துகிட்டாங்க. இத்தனை வருட தமிழ் சினிமா வரலாற்றில், எத்தனையோ நடிகர்கள் மீது ரெய்டு நடத்தி இருக்காங்க. ஆனால், ஒரு மிக முக்கிய நடிகரின் ஷூட்டிங் இடத்துக்கே போய், அவரை அங்கிருந்து அழைத்துச் சென்று விசாரணை நடத்தியது எல்லாம் இதுவரை எங்காவது நடந்திருக்கா? இதுதான் முதல் முறை.
விஜய்யுடன் ஈசிஆர் பி.சரவணன்
ரெய்டு முடிஞ்சு அவர் திரும்ப ஷூட்டிங் வந்தப்ப கூட அதே எனர்ஜி லெவலில் இருந்தார். அதே புத்துணர்ச்சியை பார்த்தேன்.
தளபதிகிட்ட இவ்வளவு கடினமா அதிகாரிகள் நடந்துக்கிட்டதுக்கு எதிரா நிறைய அரசியல் தலைவருங்க குரல் கொடுத்துருக்காங்க. பார்லிமெண்ட்ல எம்.பி. தயாநிதி மாறனே பேசி இருக்காரு. ஆனா, ரஜினி இதுவரை வாயை திறக்கலையே!? அது தான் எங்களுக்கு ரொம்ப வருத்தமா இருக்கு.
/tamil-ie/media/media_files/uploads/2020/01/a21-3-300x200.jpg)
சூப்பர் ஸ்டாரும், தளபதியும் எவ்வளவு நெருக்கமா இருந்தாங்கன்னு எல்லாருக்கும் தெரியும். அப்படி இருக்குறவரு, தளபதி மீதான ரெய்டு பத்தி ஒரு வார்த்தையாவது பேசியிருக்க வேண்டாமா? இப்போ வரைக்கும் அவர் அதை பத்தி பேசவே மாட்டேங்குறாரே!.
இதுவே, ரஜினி அவர்கள் மீது இப்படி ஒரு ரெய்டு நடந்திருந்தா நிச்சயம் தளபதி குரல் கொடுத்திருப்பார். அது தான் தளபதி!
ஹெச்.ராஜா 'விஜய் ஒரு மேட்டரே இல்லை'-ங்கறார். அர்ஜுன் சம்பத், தளபதி பத்தி ரொம்பவே தவறான வார்த்தைகளை, செய்திகளை பேசுறார். இதெல்லாத்தையும் எங்க தளபதி கவனிச்சிக்கிட்டு தான் இருக்கார். இது எல்லாத்துக்கும் அவர் சொல்ற ஒரே விஷயம் 'Ignore' என்பது தான். தூக்கி ஏறிச்சிட்டு போயிக்கிட்டே இருக்கார்" என்றார்.
விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்த சரவணன், "2021லயே தளபதி அரசியல் என்ட்ரி கொடுத்திருக்க வேண்டியது. மாவட்ட அளவிலான நிர்வாகிகள் அதைத் தான் எதிர்பார்த்தோம். அப்படித்தான் சொல்லியும் இருந்தாங்க. ஆனா, இன்னும் சட்டசபை தேர்தலுக்கு 10 மாசம் தான் இருக்கு. இனிமே இந்த தேர்தலுக்கு வருவது கஷ்டம் தான்.
/tamil-ie/media/media_files/uploads/2020/02/a1350-300x200.jpg)
எப்படி இருந்தாலும் நடந்து முடிஞ்ச ஊரக உள்ளாட்சித் தேர்தலையே விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவங்க கிட்டத்தட்ட 150 பேர் ஜெயிச்சு இருக்காங்க. இது யாருக்கும் தெரியாத ஒரு தகவல். சிவகங்கை, மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, கடலூர் ஆகிய மாவட்டங்கள்ல, தளபதி படத்தை பயன்படுத்தாமலேயே இவங்க ஜெயிச்சிருக்காங்க.
இது எங்களோட அரசியல் என்ட்ரிக்கு ஒரு சாம்பிள் தான்" என்றார்.
'காவலன்' படப் விவகாரத்தில் விஜய்க்கு பிரச்சனை கொடுத்தது திமுக. 'தலைவா' தொடங்கி 'சர்கார்' வரை விஜய்க்கு பெரும் தலைவலி கொடுத்தது அதிமுக. விஜய் அரசியலுக்கு வரும் பட்சத்தில், இவ்விரு பெரும் கட்சிகளையும் எதிர்த்தே அரசியல் செய்ய நேரிடுமே? குறிப்பாக திமுகவை எதிர்த்து விஜய்யால் அரசியலில் நிலைக்க முடியுமா? அதுமட்டுமின்றி, ரஜினி அரசியலுக்கு வந்தால் அவரையும் எதிர்க்க நேரிடுமே என்ற கேள்விக்கு பதிலளித்த சரவணன்,
"திமுகவில் தற்போது ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக உதயநிதி தான் முன்னிறுத்தப்படுகிறார். அவர் மீதான Focus அதிகமாக உள்ளது. அப்படி பார்க்கும் பொழுது, 2021 எலக்ஷன்-ல தளபதி இறங்குலனாலும், எதிர்காலத்துல இருக்கப் போற அரசியல் போட்டி விஜய் vs உதயநிதி என்பதாகத் தான் இருக்கும். இதுல சந்தேகமேயில்லை. ஆகையால் எங்களுக்கு போட்டி திமுக தான்.
/tamil-ie/media/media_files/uploads/2020/02/a1351-300x181.jpg)
ரஜினி 95கள்லயே அரசியலுக்கு வந்திருக்கணும். இது ரொம்ப லேட். ரஜினி எங்களுக்கு ஒரு பெரிய அச்சுறுத்தல் இல்ல. இருந்தாலும் காலம் தான் எல்லாத்தையும் முடிவு பண்ணனும்" என்கிறார்.