'கரூரில் நடந்தது துரதிர்ஷ்டவசமான சம்பவம்'... மோடி, ஸ்டாலின், இ.பி.எஸ், அரசியல் தலைவர்கள் இரங்கல்!

கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்ததால், மயக்கமடைந்தவர்களை வெளியே கொண்டு வர அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆனதாகவும், இதனால் அவர்களுக்கு உரிய நேரத்தில் முதலுதவி கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்ததால், மயக்கமடைந்தவர்களை வெளியே கொண்டு வர அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆனதாகவும், இதனால் அவர்களுக்கு உரிய நேரத்தில் முதலுதவி கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

author-image
abhisudha
New Update
TVK rally tragedy Karur

TVK rally tragedy Karur

விஜயின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) சார்பில் கரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட துயரச் சம்பவத்தில் பலர் உயிரிழந்ததுடன், 58 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த துரதிர்ஷ்டவசமான கூட்ட நெரிசல், ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Advertisment

மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டவர்களில் 31 பேர் உயிரிழந்ததாகத் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நிலைமையின் தீவிரத்தைக் கருதி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சியர் மற்றும் மருத்துவக் குழுவினர் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மயக்கமடைந்தவர்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் உயிரைக் காப்பாற்றும் நோக்குடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இதனிடையே கரூரில் நடந்த இந்த துயர சம்பவத்துக்கு அரசியல் தலைவர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலையும், ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி உள்ளனர். 

விஜய் இரங்கல்

Advertisment
Advertisements

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தன் X பக்கத்தில் வெளியிட்ட் பதிவில்; 

”கரூரிலிருந்து வரும் செய்திகள் கவலையளிக்கின்றன.

கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்குத் தேவையான உடனடி சிகிச்சைகளை அளித்திடும்படி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அமைச்சர் மா.சுப்பிரமணியன், அவர்களையும் - மாவட்ட ஆட்சியரையும் தொடர்புகொண்டு அறிவுறுத்தியுள்ளேன்.

அருகிலுள்ள திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களிடமும் போர்க்கால அடிப்படையில் தேவையான உதவியினைச் செய்து தரும்படி உத்தரவிட்டிருக்கிறேன். அங்கு, விரைவில் நிலைமையைச் சீராக்கும் நடவடிக்கைகைளை மேற்கொள்ள ஏடிஜிபி-யிடமும் பேசியிருக்கிறேன்.

பொதுமக்கள் மருத்துவர்களுக்கும் காவல் துறைக்கும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். 

பிரதமர் மோடி தன் X பக்கத்தில் வெளியிட்ட இரங்கல் பதிவு

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்ட இரங்கல் பதிவு

"தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் கூட்ட நெரிசல் போன்ற ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் உயிர்களை இழந்த துயரச் செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.

இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்."

எடப்பாடி பழனிச்சாமி தன் X பக்கத்தில் வெளியிட்ட பதிவு

கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகக் கட்சியின் பிரச்சாரக் கூட்டத்தில் அதன் தலைவர் விஜய் அவர்கள் பேசுகையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 29 க்கும் மேற்பட்டோர் பேர் உயிரிழந்ததாகவும், மற்றும் பலர் மயக்கமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வரும் செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது .

உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புமணி ராமதாஸ் தன் X பக்கத்தில் வெளியிட்ட பதிவு

"பரப்புரைக் கூட்டத்தில் சிக்கி 31 பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதை  எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.  பரப்புரைக்கான  ஏற்பாடுகளை செய்வதிலும், கூட்டத்தை  காவல்துறையினர் ஒழுங்குபடுத்துவதிலும் செய்த குளறுபடிகள் தான் இதற்கு காரணமாகும்.  கரூர் நெரிசல் மற்றும் உயிரிழப்புக்கான காரணங்கள் குறித்து  உயர்நிலை விசாரணைக்கு ஆணையிட வேண்டும்; இனியும் இத்தகைய விபத்துகள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்"

பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் தன் X பக்கத்தில் வெளியிட்ட பதிவு

"கரூரில் நடந்த அரசியல் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தோர் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன். மேலும், உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்கிட அரசை வலியுறுத்துகிறேன்."

அண்ணாமலை இரங்கல்

"திமுகவினர் நடத்தும் கூட்டங்களுக்கு, அந்த மாவட்டத்தின் மொத்த காவல்துறையினரையும் அனுப்பிப் பாதுகாப்பு கொடுக்கும் திமுக அரசு, எதிர்க்கட்சிகள் நடத்தும் கூட்டங்களில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாமலிருப்பது வழக்கமாகியிருக்கிறது.

உடனடியாக, உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததால் இந்த விபத்து நடந்ததா என்பது குறித்தும், மின்சாரம் தடைப்பட்டது குறித்தும் முழு விசாரணை நடத்தி, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்."

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தன் X பக்கத்தில் வெளியிட்ட இரங்கல் பதிவில், 

”கரூர் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட துயர விபத்து குறித்து அறிந்து ஆழ்ந்த வேதனையும் துயரமும் அடைகிறேன். அப்பாவி உயிர்கள் பறிபோனது என் மனதை உண்மையிலேயே நொறுக்குகிறது” என்று தெரிவித்துள்ளார். 

சிபிஐஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வேதனை

"எந்தவொரு பிரச்சாரக் கூட்டத்திலும் இவ்வளவு உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது." எந்தக் கட்டுப்பாடுகளுக்கும் எங்களை உட்படுத்திக்கொள்ள மாட்டோம்" என்ற ரசிகர்களின் செயல்பாடுகளே இதற்கு முக்கியக் காரணம். இந்த உயிரிழப்புகள் குறித்து உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும். ஏராளமான குழந்தைகள் உயிரிழந்தது மிகப்பெரிய சோகம்”

ரஜினிகாந்த் இரங்கல்

ஆளுநர் ஆன்.என்.ரவி இரங்கல்

கமல்ஹாசன் இரங்கல்

”நெஞ்சு பதைக்கிறது. கரூரிலிருந்து வரும் செய்திகள் பேரதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கின்றன.  கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த அப்பாவி மக்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கவும் வார்த்தைகளின்றித் திகைக்கிறேன்.

நெரிசலிலிருந்து மீட்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணமும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமென தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன்”.

மல்லிகார்ஜுன கார்கே இரங்கல்

" கரூரில் நடந்த அரசியல் பரப்புரையில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான கூட்ட நெரிசலில் சிக்கி பல அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர்.

அவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்க அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றவும் காங்கிரஸ் தொண்டர்களைக் கேட்டுக் கொள்கிறேன் "

பிரியங்கா காந்தி இரங்கல்

தமிழ்நாட்டின் கரூரில் நடந்த துயரமிகுந்த கூட்ட நெரிசல் (stampede) சம்பவத்தால் மிகுந்த மனவேதனை அடைந்தேன்.

இந்தச் சொல்லொணாத் துயரத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது மனமார்ந்த இரங்கல்களையும், பிரார்த்தனைகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இக்கட்டான நேரத்தில் அவர்கள் மன வலிமையைப் பெற நான் வேண்டுகிறேன், மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன்.

இந்தப் பகுதியில் உள்ள அனைத்து காங்கிரஸ் தொண்டர்களும், காயமடைந்தவர்களுக்கு உடனடியாக உதவி செய்யவும், குடும்பங்களுக்கும் அதிகாரிகளுக்கும் நிவாரணப் பணிகளில் ஆதரவளிக்கவும் நான் வலியுறுத்துகிறேன்.

கேசி வேணுகோபால் இரங்கல்

”தமிழ்நாட்டின் கரூரில் நடந்த அரசியல் பேரணியில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான கூட்ட நெரிசலில் (stampede) அப்பாவி மக்கள் உயிரிழந்தது மிகுந்த மனதை உலுக்கியது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம், மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறோம்.

இந்தப் பகுதியில் உள்ள அனைத்து காங்கிரஸ் தொண்டர்களும் காயமடைந்தவர்களுக்கு உடனடியாக சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குமாறும், நிவாரண நடவடிக்கைகளில் அதிகாரிகளுக்கு ஆதரவளிக்குமாறும் நான் வலியுறுத்துகிறேன்.”

டிடிவி தினகரன் இரங்கல்

செல்வபெருந்தகை இரங்கல்

அமைச்சர் ஜெய்ஷங்கர் இரங்கல்

தமிழ்நாட்டின் கரூரில் நடந்த கூட்ட நெரிசல் (stampede) சம்பவத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மிகுந்த வருத்தம் அளிக்கிறது.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன்.

உதயநிதி ஸ்டாலின் இரங்கல்

துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் இரங்கல்

ஜிவி பிரகாஷ்குமார் இரங்கல்

ராகுல் காந்தி இரங்கல்

"தமிழ்நாட்டின் கரூரில் நடந்த அரசியல் பேரணியில் ஏற்பட்ட துயரச் சம்பவத்தால் பல விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோனது அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய நான் பிரார்த்திக்கிறேன்.

பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குமாறும், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுமாறும் காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் தலைவர்களை நான் வலியுறுத்துகிறேன்.

தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல்

தங்கம் தென்னரசு இரங்கல்

யோகி ஆதித்யநாத் இரங்கல்

"தமிழ்நாட்டின் கரூரில் நடந்த துயரமான விபத்து குறித்துக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். இந்தச் சோகமான சம்பவம் விலைமதிப்பற்ற உயிர்களைப் பறித்துள்ளது.

துயருற்ற குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிரபு ஸ்ரீ ராமர் அவர்களுக்கு வலிமையையும், பிரிந்த ஆத்மாக்களுக்கு அமைதியையும் தர வேண்டுகிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன்."

Karur

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: