Advertisment

திருமாவளவனுக்கு தொலைபேசியில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த விஜய்

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவனுக்கு நடிகர் விஜய் தொலைப்பேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
திருமாவளவனுக்கு நடிகர் விஜய் தொலைப்பேசியில் வாழ்த்து

திருமாவளவனுக்கு நடிகர் விஜய் தொலைப்பேசியில் வாழ்த்து

விடுதலை  சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவனுக்கு  நடிகர் விஜய் தொலைப்பேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisment

விசிக தலைவர் திருமாவளவன் 61 -வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் “ இம்மண்ணில் ஆழ விதைக்கப்பட்டுள்ள தந்தை பெரியார் - புரட்சியாளர் அம்பேத்கர் கருத்துகளைத் தனது பேச்சாலும் செயல்களாலும் வளப்படுத்திடும் அன்புச் சகோதரர் திருமாவளவன்  அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்” என்று பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் தொலைப்பேசியில் திருமாவளவனை அழைத்து நடிகர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனை சமூகவலை தளத்தில் பகிர்ந்துள்ள திருமாவளவன் விஜய்க்கு நன்றி தெரிவித்துள்ளார். ” பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த விஜய்  அவர்களுக்கு நெஞ்சாந்த நன்றிகள் “ என்று குறிப்பிட்டுள்ளார்.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment