அமைச்சர்களை ஏன் பேச விடாமல் ஜெயலலிதா வைத்திருந்தார் தெரியுமா? - தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் அதற்கான காரணத்தை சொல்கிறார்.
சென்னை அருகே பள்ளிக்கரணை பகுதியில் உள்ள நாராயணபுரம் ஏரி கனமழையால் நிரம்பி வழிகிறது. அந்த ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீர் அருகில் உள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்தது. நாராயணபுரம் ஏரியை தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் இன்று (நவம்பர் 7) பார்வையிட்டார். அவருடன் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் கட்சி நிர்வாகிகள் வந்தனர்.
நாராயணபுரம் ஏரியில் போடப்பட்ட மணல் மூடைகளில் விஜயகாந்த் சிறிது தூரம் நடந்து சென்று பார்வையிட்டார். அவரை கட்சி நிர்வாகிகள் கையைத் தாங்கியபடி பிடித்து அழைத்து சென்றனர். பின்னர் விஜயகாந்த் நிருபர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து கூறியதாவது:
கமல்ஹாசன் புதிய கட்சி தொடங்கினால் வரவேற்பேன். அவர் கட்சி தொடங்கி கிளை கழகங்கள் ஆரம்பிக்கட்டும். அதன் பின்னர் கூட்டணி பற்றி பேசிக்கொள்ளலாம். யார் கட்சி தொடங்கினாலும் வரவேற்கிறேன்.
சினிமாத் துறைக்கு கமல் என்ன செய்தார் என்று அவரிடம் தான் கேட்க வேண்டும். மழை நிவாரணப் பணிகளுக்காக ஒதுக்கப்படும் நிதி மக்களுக்கு பயன்படுத்தப்படவில்லை. அரசியல் வாதிகளுக்குதான் ஒதுக்கப்படுகிறது. அமைச்சர்கள் தற்போது மாறி மாறி பேசி வருகிறார்கள். இதனால் தான் ஜெயலலிதா அமைச்சர்களை பேசவிடாமல் வைத்திருந்தார். இவ்வாறு விஜயகாந்த் கூறினார்.
பிரேமலதா கூறுகையில், ‘பிரதமர் மோடி- கருணாநிதி சந்திப்பை அரசியல் ஆக்க வேண்டாம்’ என்றார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளையும் விஜயகாந்தும், பிரேமலதாவும் வழங்கினர்.