scorecardresearch

ஜார்ஜ் கோட்டையை ஆளப்போகும் “தீபாம்மா”! புரட்சித் தலைவர் “மாதவன்” சார்! வைரலாகும் வீடியோ!

தீபாவையும், அவரது கணவர் மாதவனையும் புகழ்ந்து தொண்டர் ஒருவர் கதறுகிறார். ‘நாளைய பிரதமரே’ என்கிற ரேஞ்சுக்கு இருக்கும் அந்த நபரின் வீடியோ இங்கே

ஜார்ஜ் கோட்டையை ஆளப்போகும் “தீபாம்மா”! புரட்சித் தலைவர் “மாதவன்” சார்! வைரலாகும் வீடியோ!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பிறகு தமிழகத்தில் நடக்கும் அவலங்களை உங்களுக்கு விளக்கி சொல்ல வேண்டிய அவசியமில்லை.

ஜெயலலிதா இறந்த போது அன்று இரவே ஓ.பன்னீர் செல்வத்தை முதல்வராக அறிவிக்க, அதன்பின் சசிகலா கட்சியின் பொதுச் செயலாளராக பதவியேற்க, ஓ.பி.எஸ். தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்ய, அதன்பின் ‘என்னை கட்டாயப்படுத்தி பதவி விலகச் சொன்னார்கள்’ என அணுகுண்டை போட, கட்சி இரண்டாக பிரிய, அதுவரை யாருக்குமே தெரியாமல் இருந்த எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க, சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு செல்ல, இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்க, தினகரனை சசிகலா துணைப் பொதுச் செயலாளராக அறிவிக்க, அதன்பின் தினகரனும் சிறைக்குச் செல்ல, பின் விடுதலையாகி வெளிவர, ஓ.பி.எஸ் தர்மயுத்தம் தொடங்க, துணை முதல்வர் பதவி கொடுத்தவுடன் ஓ.பி.எஸ். எடப்பாடியாருடன் இணைய, இருவரும் சேர்ந்து தினகரனை எதிர்க்க, தினகரன் எடப்பாடியாரை வீட்டுக்கு அனுப்புவேன் என்று சொல்ல, பொதுக்குழுவைக் கூட்டி சசிகலா, தினகரன் பதவிகள் செல்லாது என அறிவிக்க, ஜெயலலிதா அப்போலோவில் இட்லியே சாப்பிடவில்லை… நாங்கள் பொய் சொன்னோம் என்று அமைச்சர் ஒருவர் சொல்ல, ‘இல்லை..இல்லை’ பார்த்தோம் என்று மற்ற அமைச்சர்கள் மறுக்க, ஜெயலலிதா உண்மையில் இட்லி சாப்பிட்டாரா? இல்லையா? என்பதே இப்போதைய தமிழக அரசியலின் நிலவரமாக உள்ளது.

இவ்வளவு கூத்திற்கும் இடையில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும், அவரது கணவர் மாதவனும், அதிமுகவின் ஒன்றரைக் கோடி தொண்டர்கள் (அதிமுக கணக்குப்படி) எங்கள் பின்னே தான் உள்ளனர். எங்களுக்கே இரட்டை சின்னம் கிடைக்கும். அதன்பின், ஓ.பி.எஸ்.ஸும் , இ.பி.எஸ்.ஸும் எங்கள் பின்னே வருவார்கள் என கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், தீபாவையும், அவரது கணவர் மாதவனையும் தொண்டர் ஒருவர் புகழ்பாடும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. ‘நாளைய பிரதமரே’ என்கிற ரேஞ்சுக்கு அந்த நபர் புகழ்கிறார். இதை மிகவும் மகிழ்ச்சியோடு தீபாவும், மாதவனும் கேட்டு ரசிக்கின்றனர். அந்த வீடியோ இதோ!.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Viral video of deepa and madhvan praise themselves