விருதுநகரில் விஜய பிரபாகரன் மற்றும் மாணிக்கம் தாகூர் இடையே கடும் போட்டி நிலவுகிறது. மக்களைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் விருதுநகர் தொகுதியில் தி.மு.க கூட்டணியில் சிட்டிங் எம்.பியான காங்கிரஸின் மாணிக்கம் தாகூர் போட்டியிட்டுள்ளார். அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயபிரபாகனும் பாஜக சார்பில் ராதிகா சரத்குமாரும் போட்டியிட்டனர்.
இந்நிலையில் இங்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே, விஜயபிரபாகரன் முன்னிலை வகித்தார். பின்னர் சில சுற்றுகளில் மாணிக்கம் தாகூர் முன்னிலையில் வந்தார். அடுத்த சுற்றில் மீண்டும் விஜயபிரபாகரன் 32 வாக்குகள் முன்னிலை என தொடர்ந்து தற்போது வரை விஜய பிரபாகரன் மற்றும் மாணிக்கம் தாகூர் இடையே கடும் போட்டி நிலவுகிறது. விஜய பிரபாகரனுக்கு இது அறிமுகத் தேர்தல் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இருவருக்கும் இடையே குறைந்த வாக்கு எண்ணிக்கையிலேயே வித்தியாசம் உள்ளன. மதியம் 1.48 மணி நேர நிலவரப்படி காங்கிரஸின் மாணிக்கம் தாகூர் முன்னிலை வகிக்கிறார். மாணிக்கம் தாகூர்
1,60,034 வாக்குகளும், விஜய பிரபாகரன் 1,59,821 வாக்குகளும் பெற்றுள்ளனர். இருவருக்கும் இடையே 213 வாக்குள் மட்டுமே வித்தியாசம் உள்ளன. பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட ராதிகா சரத்குமார் 96,406 வாக்குகள் பெற்றுள்ளார்.
இந்நிலையில், விஜயபிரபாகரன் தாயாரும், தே.மு.தி.க பொதுச் செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த் சென்னையில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் தியானத்தில் ஈடுபட்டு வருகிறார்.