ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டி : மீண்டும் ட்விட்டருக்குத் திரும்பினார் விஷால்

நேற்றிரவு #NewProfilePic என கமலைப் போல ஹாஷ்டேக்குடன் தன்னுடைய புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார் விஷால்.

By: Updated: December 3, 2017, 05:27:21 PM

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதால், மீண்டும் ட்விட்டருக்குத் திரும்பியுள்ளார் விஷால்.

நடிகர் சங்க செயலாளராகவும், தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராகவும் இருந்துவரும் விஷால், வருகின்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், சுயேட்சையாகக் களம் இறங்குகிறார். தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள். எனவே, நாளைக்கு வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

திமுக சார்பில் மருது கணேஷ், அதிமுக சார்பில் மதுசூதனன், டிடிவி தினகரன், நாம் தமிழர் சார்பில் கலைக்கோட்டுதயம், தீபா என போட்டி பலமாக இருக்கும் நிலையில், விஷாலும் களம் இறங்கியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், இயக்குநர் அமீரும் தேர்தலில் நிற்கப் போவதாகத் தகவல் கிடைத்துள்ளது.

“சுயேட்சையாக நின்று ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெறுவார் விஷால். வெற்றி, தோல்வி என்பது அடுத்த கட்டமே… தேர்தலில் போட்டியிடுவதே வெற்றி பெற்றதற்கு சமம். மக்களின் நலனுக்காக உழைப்பதற்கு விஷால் சிறந்தவர்” என விஷால் இல்லத்தில் பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளித்த நடிகர் உதயா கூறியுள்ளார்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக ட்விட்டரில் ஆக்ட்டிவாக இல்லாத விஷால், மீண்டும் ட்விட்டருக்குத் திரும்பியுள்ளார். கடந்த ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டு பற்றி அவர் கடைசியாக பதிவிட்டிருந்தார். அதற்குப் பிறகு எந்தப் பதிவையும் விஷால் பதிவிடவில்லை. சில பதிவுகளை மட்டும் தன்னுடைய கம்பெனியான விஷால் ஃபிலிம் ஃபேக்டரியின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், நேற்றிரவு #NewProfilePic என கமலைப் போல ஹாஷ்டேக்குடன் தன்னுடைய புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார். அதில், சண்டைக்குப் போவது போல கையை மடக்கி போஸ் கொடுத்திருக்கிறார் விஷால். ஆர்.கே.நகர் தேர்தல் தொடர்பான விஷயங்களைப் பதிவிடுவதற்காகவே அவர் மீண்டும் ட்விட்டருக்குத் திரும்பியுள்ளார் என்கிறார்கள்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Vishal twitter id activated due to rk nagar by election

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X