குமரி கண்ணாடி பாலம்.. ஆய்வுப் பணிகள் தீவிரம்.. பாறை பொடிகள் ஐ.ஐ.டி.,யில் சோதனை
திருவள்ளுவர் சிலை பாறைக்கும், சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் இடையே உள்ள கடற் பரப்பை கண்ணாடி இழைப்பாலம் கொண்டு இணைக்க ரூ.30 கோடியில் திட்டம் தீட்டப்பட்டது.
கன்னியாகுமரி கடலில் அருகருகே உள்ள பாறைகளில் சுவாமி விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளூவர் சிலை உள்ளது. இந்த இடங்களுக்கு கடல் கரையில் இருந்து, பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தின் சார்பில் பயணிகளுக்கான படகு போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடல் நீர் மட்டம் குறைவாக இருக்கும் நாட்களில் திருவள்ளுவர் சிலை பாறைக்கு படகு போக்குவரத்து தடைப்படுகிறது.
Advertisment
இதையடுத்து, திருவள்ளுவர் சிலை பாறைக்கும், சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் இடையே உள்ள கடற் பரப்பை கண்ணாடி இழைப்பாலம் கொண்டு இணைக்க ரூ.30 கோடியில் திட்டம் தீட்டப்பட்டது. இது தொடர்பாக ஆய்வுப் பணிகளில் ஈடுபட்ட அதிகாரிகள் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழிடம் கூறுகையில், “இரண்டு பாறைகள் இடையே அமைக்கப்பட உள்ள நீல கடல் பரப்பின் மேல் அமைக்கும் கண்ணாடி இழை பாலத்தில் நடந்து செல்லும் போது.அவர்களது பாதங்களின் கிழே உள்ள நீல வண்ண கடல்-ஐ ரசிக்க முடியும்.
கன்னியாகுமரி கண்ணாடி பாலம் மாதிரி வரைபடம்
இந்தக் காட்சி வித்தியாசமாகவும், மனதிற்கு மகிழ்ச்சியையும் கொடுப்பதாக அமையும். மேலும், பாலம் அமைப்பது தொடர்பாக முதல் கட்டமாக ஆய்வு பணியை தொடங்கி உள்ளோம். இரண்டு பாறைகளின் கடின தன்மையை அறிய துளை இட்டு பாறை பொடிகளை எடுத்து சோதனைக்கு உட்படுத்த உள்ளோம்.
இந்த மாதிரிகள் அனைத்தையும்.சென்னை ஐ.ஐ.டி.,க்கு அனுப்பி, இரண்டு பாறைகளின் திறத்தன்மைமை ஆய்வு செய்ய உள்ளோம். இந்த ஆய்வுகளின் முடிவில் இரண்டு பாறைகளுக்கு இடையே ஆன கண்ணாடி இழை பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கும். ஒரு ஆண்டு கால அவகாசத்தில் பாலப் பணியை முடிக்க திட்டமிட்டுள்ளோம்” எனத் தெரிவித்தனர்.
செய்தியாளர் த.இ. தாகூர்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/