நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியது. திருச்சியில் மொத்தம் 8,650 வாக்குகள் பதிவாகியுள்ளது. அதை என்னும் பணி தற்போது துவங்கி இருக்கின்றது.
திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான ஜமால் முகமது கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்கு என்னும் மையத்தில் மூன்று அடுக்கில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்திற்குள் முகவர்கள் செல்போன் எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் அனுமதி அளிக்கப்படுகிறது. செல்போன், ஐ-பேட், லேப்டாப், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட கருவிகளை முகவர்கள் எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நுழைவாயில் காவல்துறையினரின் தீவிர சோதனைக்கு பிறகு முகவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
திருச்சியில் தபால் வாக்குகள் எண்ணும் பணி சரியாக காலை 8 மணிக்கு தொடங்கியது. திருச்சியில் தபால் வாக்கில் முதல் வாக்கு நாம் தமிழர் கட்சிக்கு விழுந்துள்ளது.
செய்தி: க.சண்முகவடிவேல்