ஜெயலலிதா இல்லாதது வருத்தமாக உள்ளது; துரைமுருகன்!

வேலூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா மற்றும் வைரவிழா பொதுக் கூட்டம் முத்துக்கடையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தி.மு.க செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். பல்வேறு நலத்திட்ட உதவிகளை அவர்கள் வழங்கினர்.

அப்போது பேசிய துரைமுருகன், “தலைவர் கருணாநிதி தற்போது நலமுடன் உள்ளார். நாள்தோறும் பத்திரிக்கைகளைப் படிக்க வைத்து கேட்கிறார். யாரை பிடிக்கும் என மருத்துவர் கேட்டதற்கு, ‘அண்ணாவைப் பிடிக்கும்’ என பதில் கூறினார். அவர் நலமாகவே உள்ளார்.

ஆனால், தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இல்லாமலிருப்பது சோகமாக உள்ளது. ஜெயலலிதா இருந்தபோது இருந்த கட்டுப்பாடு, தற்போது அ.தி.மு.கவில் இல்லை” என்றார்.

இதனிடையே பேசிய மு.க.ஸ்டாலின், “ஜெயலலிதா சாவில் மர்மம் உள்ளது. அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் என்ன? அரசு செய்யும் பணிகளை நாங்கள் செய்துவருகிறோம்” என்று பேசினார்.

×Close
×Close