Advertisment

இ-சேவை மையங்கள் மூலம் மேலும் 15 சான்றிதழ்கள்!!

அரசு இ-சேவை மையங்கள் மூலம் மேலும் 15 சான்றிதழ்கள் வழங்க அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

author-image
manik prabhu
புதுப்பிக்கப்பட்டது
New Update
tamilnadu government, tamilnadu government E-sevai

அரசு இ-சேவை மையங்கள் மூலம் மேலும் 15 சான்றிதழ்கள் வழங்க அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

Advertisment

தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் மேற்பார்வையின் கீழ், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் கிராம வறுமை ஒழிப்புக் குழுக்கள் ஆகியவற்றின் வாயிலாக தற்பொழுது பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட எண்ணிக்கையிலான அரசு இ-சேவை மையங்கள் தமிழகம் முழுவதும் செயல்பட்டு வருகின்றன. பொது மக்களுக்கு அரசின் சேவைகளை நேர்த்தியாகவும், வெளிப்படையாகவும் அவர்களது இருப்பிடத்திற்கு அருகிலேயே அளிப்பது இதன் நோக்கம் ஆகும்.

இச்சேவை மையங்கள் மூலம், வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், கணவனால் கைவிடப்பட்ட பெண் என்பதற்கான சான்றிதழ், முதல் தலைமுறை பட்டதாரிச் சான்றிதழ், முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம், மூவலூர் இராமமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண நிதி உதவித் திட்டம், விதவை மறுமண நிதி உதவித் திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதி உதவித் திட்டம் என்பன உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தமிழக அரசின் வெவ்வேறு துறைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மூலம் சாதி சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண் என்பதற்கான சான்றிதழ்கள் இ-சேவை வாயிலாக ஏற்கனவே வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் கடந்த மாதம் நடைபெற்ற வருவாய் துறை மானியக் கோரிக்கையின் போது, அத்துறையின் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், "வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மூலம் மேலும் 15 சான்றிதழ்கள் வழங்கப்படும்" என்றார்.

அதன்படி, விவசாய வருமான சான்றிதழ், சிறு-குறு விவசாயி சான்றிதழ், கலப்பு திருமண சான்றிதழ், விதவை சான்றிதழ், வேலையில்லாதவர் என்பதற்கான சான்றிதழ், குடிபெயர்வு சான்றிதழ், இயற்கை இடர்பாடுகளால் இழந்த பள்ளி, கல்லூரி சான்றிதழ்களின் நகல் பெற சான்றிதழ், ஆண்குழந்தை இல்லை என்பதற்கான சான்றிதழ், திருமணம் ஆகாதவர் என்பதற்கான சான்றிதழ், வாரிசு சான்றிதழ், வசிப்பிட சான்றிதழ், சொத்து மதிப்பு சான்றிதழ், அடகு வணிகர் உரிமம், கடன் கொடுப்போர் உரிமம், இதர பிற்படுத்தப் பட்ட வகுப்பினர் வகுப்பு சான்றிதழ் என 15 வகையான சான்றிதழ்களை இ-சேவை மையங்கள் வழியாக ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் நடைமுறைகளை பின்பற்றி பெறலாம். இதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment