மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டும்: மீராகுமார் கோரிக்கை

சித்தாந்த அடிப்படையிலான இந்த போரில் எனக்கு மனசாட்சியின்படி வாக்களிக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் போது வேட்பாளர் மீராகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மீராகுமார் நிறுத்தப்பட்டுள்ளார். இவர் தனக்கு ஆதரவு கோரி நேற்று மாலை தமிழகம் வந்தார்.

திமுக செயல்தலைவர் ஸ்டாலினை சந்தித்த அவர், தனக்கு ஆதரவளிக்குமாறு கோரினார். இந்த நிகழ்வின் போது, திமுக, காங்கிரஸ் கட்சிகளின் மூத்த நிர்வாகிகள் உடனிருந்தனர். அதன்பின்னர், திமுக தலைவர் கருணாநிதியின் கோபாலாபுரம் இல்லத்துக்கு சென்ற மீராகுமார், அவரிடம் நேரில் ஆதரவு கோரினார். மீராகுமாரை பொது வேட்பாளராக கருதி வெற்றிபெற செய்ய வேண்டும் என ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில், குடியரசு தலைவர் தேர்தலின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மீராகுமார் தனக்கு ஆதரவு கோரி புதுச்சேரி புறப்பட்டார். அதற்கு முன் செய்தியாளர்களை சந்தித்த அவர், சித்தாந்த அடிப்படையிலான இந்த போரில் எனக்கு மனசாட்சியின்படி வாக்களிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மேலும், 17 எதிர்கட்சிகள் ஆதரவோடு இந்த தேர்தலை நம்பிக்கையுடன் சந்திக்க உள்ளேன். திமுக தலைவர் கருணாநிதி, ஸ்டாலினுக்கு எனது மனமார்ந்த நன்றி மற்றும் தமிழக மக்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

×Close
×Close