பால் கலப்படம் குறித்து அரசு எடுத்த நடவடிக்கை என்ன? மு.க ஸ்டாலின் கேள்வி

பாலில் வேதிப்பொருட்களை கலப்படம் செய்பவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என அமைச்சர் ராஜேந்திர பாலஜி தெரிவித்தார்.

சட்டமன்றத்தில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின், பால் கலப்படத்தை தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என கேள்வி எழுப்பினார். இதற்கு பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதில் அளித்து பேசும்போது: பாலில் யார் கலப்படம் செய்தாலும் அவர்கள் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள். அவர்கள் அபாராதம் செலுத்தி தப்பிக்க முடியாது. பாலில் கலப்படம் செய்பவர்கள் மீது பாகுபாடு இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் உத்தவிட்டுள்ளார் என்று பதில் அளித்தார்.

×Close
×Close