Advertisment

என் மகள் என்ன தவறு செய்தாள்? தொழிலாளியின் மகள் டாக்டராக கூடாதா? அனிதா தந்தை கதறல்

தொழிலாளியின் மகளும், தாழ்த்தப்பட்டவர்களின் குழந்தைகளும் மருத்துவராகக் கூடாதா என்று கண்ணீர் விட்ட அனிதா தந்தையின் கதறல் அனைவரையும் கலங்கச் செய்துள்ளது.

author-image
manik prabhu
புதுப்பிக்கப்பட்டது
New Update
Anitha, NEET

என் மகள் என்ன தவறு செய்தாள்? தொழிலாளியின் மகளும், தாழ்த்தப்பட்டவர்களின் குழந்தைகளும் மருத்துவராகக் கூடாதா என்று கண்ணீர் விட்ட அனிதா தந்தையின் கதறல் அனைவரையும் கலங்கச் செய்துள்ளது.

Advertisment

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே குழுமூரை சேர்ந்தவர் அனிதா. சிறு வயதில் இருந்தே டாக்டராக வேண்டும் என கனவு கண்டு, அதற்காக சிரமப்பட்டு படித்து வந்தார். அவரது உழைப்புக்கு ஏற்றார்போல் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 1,176 மதிப்பெண்கள் எடுத்து, 196.5 கட்-ஆஃப் மதிப்பெண்ணும் பெற்றார். ஆனால், நீட் தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு 86 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்ததால், மருத்துவம் படிக்கும் வாய்ப்பை இழந்தார்.

நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற சட்டப் போராட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டு போராடிய அனிதா, நீட் அடிப்படையில் தான் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பால் விரக்தியடைந்துள்ளதாக தெரிகிறது.

கடும் மன உளைச்சலில் இருந்த அனிதா, தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். சிறு வயதிலேயே தாயை இழந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த அனிதா, கூலி தொழிலாளியான அவரது தந்தை சண்முகம், நன்கு சகோதரர்களின் அரவணைப்பில் செல்லமாக வளர்ந்துள்ளார். பொருளாதராத்தில் கஷ்டப்படும் குடும்பமாயினும், சிறந்த முறையில் படித்து படிப்பில் படு சுட்டியாக திகழ்ந்துள்ளார். பள்ளித் தேர்வுகளிலும் அதிக மதிப்பெண் பெறும் மாணவியாகவே அவர் இருந்துள்ளார். தனது படிப்பின் மூலம், அவரது ஊரில் மற்ற மாணவர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கிய அனிதா, தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவராக கான வேண்டிய மகளை மரணக் கோலத்தில் கண்டு கதறிய அவரது தந்தை சண்முகம், "டாக்டராகி விட வேண்டும் என நினைத்து சிறு வயதில் இருந்தே கஷ்டப்பட்டு படித்து வந்தாள் எனது மகள். ஊரிலேயே முதல் டாக்டராகி விட வேண்டும் எனவும் அவள் விரும்பினாள். என் மகள் வேறு என்ன தவறு செய்தாள்? இந்த நாட்டில் தொழிலாளிகளின் மகளும், தாழ்த்தப்பட்டவர்களின் குழந்தைகளும் மருத்துவர் ஆகக் கூடாதா? நீட் தேர்வு காரணமாகத் தான் எனது மக்கள் இறந்து விட்டாள். இதற்கு மத்திய-மாநில அரசுகள் தான் காரணம். நீட் இல்லையெனில் எனது மகள் மருத்துவராகி இருப்பார். அவளுக்கு கால்நடை மருத்துவம் படிக்க இடம் கிடைத்தது. ஆனால், அதை அவள் விரும்பவில்லை. ஆசைப்பட்டபடி, மருத்துவராக முடியவில்லை என மனதுக்குள்ளேயே புழுங்கி, புழுங்கி இப்படி ஒரு முடிவை எடுத்து விட்டாள்" என கண்ணீர் விட்டு கதறியது அனைவரையும் கலங்கச் செய்துள்ளது.

Neet Medical Admission Anitha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment