ரசிகர்கள் சந்திப்பு எப்போது? ரஜினி பதில்

சென்னை திரும்பும் முன் அவர் மகாராஷ்ட்ரா முதல்வரின் குடும்பத்தினரை சந்தித்துப் பேசினார்.

ரசிகர்களை இன்னும் இரண்டு மாதத்தில் சந்திப்பேன் என்று மும்பையில் இருந்து சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் தெரிவித்தார்.

காலா படத்தின் படப்பிடிப்பு மும்பை தாராவில் 11 நாட்கள் நடைபெற்றது. இதனையடுத்து மும்பை போல செட் அமைத்து சென்னையில் காலா படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர்.

மும்பையில் படப்படிப்பு முடிந்து சென்னை திரும்பிய ரஜினி விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேசினார். அப்போது, ‘ஜூன் 24 முதல் காலாவின் 2ஆம் கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்கிறேன். 2 மாதத்தில் மீண்டும் ரசிகர்களை சந்திப்பேன்’ என்று கூறினார்.

சென்னை திரும்பும் முன் அவர் மகாராஷ்ட்ரா முதல்வரின் குடும்பத்தினரை சந்தித்துப் பேசினார்.

×Close
×Close