ஊழலுக்கு எதிரானவர்கள் எனது உறவினர்கள்: கமல்ஹாசன்

ஊழலுக்கு எதிரானவர்கள் எனக்கு உறவினர்கள் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடனான சந்திப்புக்கு பின்னர், நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

By: September 21, 2017, 3:46:01 PM

ஊழலுக்கு எதிரானவர்கள் எனக்கு உறவினர்கள் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடனான சந்திப்புக்கு பின்னர், நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

அரசியல் ஆயுதமாக தனது டுவிட்டரை உபயோகித்து வந்த கமல்ஹாசன், நான் அரசியலுக்கு வந்து விட்டேன். கோட்டையை நோக்கிய எனது பயணம் தொடங்கி விட்டது என தெரிவித்ததையடுத்து, கூடிய விரைவில் அவர் அரசியல் களம் காண்பார் என எதிர் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் உலக நாயகன் கமல்ஹாசனை சந்திக்க சென்னை வந்தடைந்தார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த அவர், அங்கிருந்து கமல்ஹாசன் இல்லம் அமைந்துள்ள ஆழ்வார்ப்பேட்டைக்கு சென்றார். அங்கு இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சுமார் ஒரு மணி நேர ஆலோசனைக்கு பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய கமல்ஹாசன், டெல்லி முதல்வர் என்னை சந்திக்க வேண்டும் என்று கேட்டதையே நான் பாக்கியமாக கருதுகிறேன். சென்னை வந்து அவர் என்னை சந்தித்ததில் பெருமை கொள்கிறேன். பெருமை ஊழலை எதிர்ப்பவர்கள் எனக்கு உறவினர்கள். அந்த வகையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. எனது தந்தை காலம் முதலே அரசியல் தொடர்புடையவன் நான் என்றார்.

பின்னர் பேசிய கெஜ்ரிவால், நான் கமல்ஹாசனுடைய தீவிர ரசிகன் நான். நடிகராகவும், நல்ல மனிதராகவும் அவருடைய ரசிகன் நான். நாட்டில் பெரும்பாலானோர் மதவாதத்திற்கு எதிரான கருத்தை கொண்டுள்ளனர். நாடு ஊழலாலும், மதவாததாலும் பாதிக்கப்பட்டுள்ளது. ஊழலுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டிய காலம் வந்துள்ளது. எதிர்காலத்திலும் இந்த சந்திப்பு தொடரும் என்றார்.

இதற்கு முன்னர், கடந்த 2015-ஆம் ஆண்டு அரவிந்த் கெஜ்ரிவாலை டெல்லியில் கமல்ஹாசன் சந்தித்தார். அப்போது, டெல்லியில் நிறைவேற்றி வரும் திட்டங்களுக்காக கெஜ்ரிவாலுக்கு கமல் பாராட்டு தெரிவித்தார்.

முன்னதாக, கேரள முதல்வர் பினராயி விஜயனை கமல்ஹாசன் அண்மையில் சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், “பினராயி விஜயனுடனான சந்திப்பில் அரசியல் நோக்கம் இருக்கலாம். அரசியலில் நான் இப்போது பயிலும் காலத்தில் இருக்கிறேன். அந்த வகையில் அவரிடம் ஆலோசனையும் பெற்றுள்ளேன். தலைவர்களின் அனுபவங்களை அறிந்து கொள்ள அவர்களுடனான சந்திப்பு நன்மை பயக்கும். அவர் எந்த கட்சியை சேர்ந்தவர் என்பது முக்கியமில்லை. அவரது கருத்துகள், திட்டங்கள், பணிகள் மக்கள் நலனை பிரதிபலிப்பதாக இருக்கிறது. அரசியலில் ஈடுபடுவது குறித்து பினராயி விஜயன் மட்டுமல்ல வேறு சில தலைவர்களிடமும் ஆலோசனைகளை பெறுவேன் என்றார்.

எனவே, கமல்ஹாசன் அதேனும் அரசில கட்சியில் இணைந்து பணியாற்றுவாரா என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எந்த கட்சியிலும் சேரமாட்டேன். அரசியலுக்கு வரும் சூழ்நிலையில் தனி கட்சிதான் தொடங்குவேன் என்றும் கமல் தெளிவு படுத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Who are all against corruption are my relatives kamalhaasan

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X