தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திர பாபுவின் பதவிக் காலம் 2023 ஜூன் மாதம் 30ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இந்த நிலையில் புதிய டிஜிபியை தேர்வு செய்வதற்கு சீனியாரிட்டி அடிப்படையில் தமிழ்நாடு அரசு பட்டியல் தயாரித்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்ப வேண்டும்.
இந்தப் பணி டிஜிபி ஓய்வு பெறுவதற்கு 3 மாதத்துக்கு முன்னரே அனுப்பி வைக்க வேண்டும். அந்த வகையில் தமிழ்நாடு அரசு தயாரித்துள்ள பட்டியலில், சஞ்சய் அரோரா, சங்கர் ஜிவால், விஸ்வநாதன், ஆபாஷ் குமார், சீமா அகர்வால் ஆகியோர் உள்ளனர்.
-
டி.ஜி.பி. சைலேந்திர பாபு
இதில் சஞ்சய் அரோரா டெல்லி காவல் ஆணையராக உள்ளார். இதனால், அவர் பட்டியலில் இருக்க வாய்ப்பில்லை. ஆகவே இந்தப் பட்டியலில் உள்ள சங்கர் ஜிவால் மற்றும் ஏ.கே. விஸ்வநாதன் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
சென்னை மக்களுக்கு ஏ.கே. விஸ்வநாதன் ஏற்கனவே பரீட்சயமான முகம் ஆவார். இவர் சென்னை காவல் ஆணையராக ஏற்கனவே இருந்துள்ளார். அதேபோல், சங்கர் ஜிவாலும் பரீட்சயமான முகம் ஆவார். மேலும் இருவர் இடையே அடுத்த டிஜிபி விவகாரத்தில் கடும் போட்டி நிலவுவதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/