குட்கா ஊழல் புகார் தொடர்பான வழக்கை ஓய்வு பெற்ற நீதிபதி ( உயர்நீதிமன்றம்/ உச்சநீதிமன்றம்) தலைமையில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரிய தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் வழக்கு விசாரணை தொடங்கியது.
விசாரணை தொடங்கியதும், குட்கா முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த அரசு ஏன் தயக்கம் காட்டுகிறது? தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி குத்துஸ் ஆகியோர் கேள்வி எழுப்பினர்.
அரசு தலைமை வழக்கறிஞர் வாதம் : லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை முடியும் நிலையில் உள்ளது. மத்திய அரசு அதிகாரிகால் சம்பந்தப்பட்டிருக்கிறார்கால் என்பதற்காக சி பி ஐ விசாரணைக்கு மாற்ற வேண்டிய அவசியமில்லை. மாநில அரசு அதிகாரிகள் பெரும்பான்மையபர்கள் மீது புகார் உள்ளது. குறைந்த மனித சக்தியை வைத்து சி பி ஐ இந்த வழக்கை விசாரிக்க முடியாது. தேவைப்பட்டால் நீதிமன்றம் கண்காணிக்கலாம். விசாரணை அறிக்கைகளை தாக்கல் செய்கிறோம். இதே போல் உச்ச நீதிமன்றம் பல வழக்குகளை கண்காணித்திருக்கிறது. உணவு பாதுகாப்பு ஆணையர் தரப்பில் கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்
ராஜகோபால் - பறிமுதல் செய்யப்படும் குட்கா பொருட்கள் அவ்வப்போதுக்கு அழிக்கப்படுகிறது.
நீதிபதிகள் : குட்கா வழக்கில் சி.பி.ஐ விசாரணைக்கு தமிழக அரசு தயக்கம் மற்றும் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதில் இருந்து இந்த வழக்கின் தீவிரம் புரிகின்றது.
உணவு பாதுகாப்பு ஆணையர் தரப்பு வக்கீல் வாதம் : மென்றுதின்னும் புகையிலையை (chewing tobacco) தடுக்கும் வகையில் எவ்வித உத்தரவை பிறப்பித்தாலும், நீதிமன்றத்தை நாடி தடை வாங்கி விடுகின்றனர். குட்கா மீதான தடையை முறையாக முழுமையாக அமல்படுத்தி வருகிறோம். 2013 ஆம் ஆண்டு தடை கொடுவரப்பட்ட ஆண்டிலிருந்து இதுவரை 5 ஆயிரம் டன்னுக்கும் அதிகமாக தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உடனுக்குடன் அழிக்கப்பட்டுள்ளன.
நீதிபதிகள் : சிபிஐ விசாரணைக்கு ஒத்துக்கொண்டு நீங்கள் ஏன் அவர்களுக்கு போதிய ஒத்துழைப்பை வழங்கக்கூடாது?
மதிய இடைவேளைக்கு பின் விசாரணை தொடங்கியது.
விஜிலன்ஸ் கமிஷனர் தரப்பில் வாதாடிய வக்கீல் அரவிந்த் பாண்டியன், ‘லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியின் கட்டுப்பாட்டுக்குள் வராது. நாங்கள் விசாரணை குறித்து டிஜிபியுடன் விவாதிக்கமாட்டோம். எனவே இந்த வழக்கை விஜிலன்ஸ் துறையே விசாரிக்க அனுமதிக்க வேண்டும். சிபிஐ விசாரணை தேவையில்லை’ என வாதிட்டார்.
மேலும், ‘’இதே போன்று டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கும் நிலுவையில் உள்ளது. திமுக கடந்த ஜூலை மாத இறுதியில் வழக்கு தொடர்ந்தது. டிராபிக் ராமசாமி ஆகஸ்ட் முதல் வாரம் வழக்கு தொடர்ந்துள்ளனர். விசாரணையில் தொய்வு என்றாலே வேறு அமைப்புக்கு மாற்ற முடியும். திமுக மனுவில் உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான சிபிஐ அதிகாரிகள் அடங்கிய விசாரணை என கேட்டுவிட்டு, தற்போது சிபிஐ விசாரணை கோரி வாதங்களை முன்வைக்கின்றனர்’’ என்றார்.
தி.மு.க அன்பழகன் தரப்பில் மூத்த வக்கீல் வில்சன் : வருமான வரித்துறையிலிருந்து தலைமை செயலாளர், டிஜிபிக்கு ஆகியோருக்கு அனுப்பிய கடிதத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முறைகேடுக்கு துணைபுரிந்த அனைத்து அதிகாரிகளையும் பாதுகாக்க ஊழல் கண்காணிப்பு ஆணையம் பாதுகாக்க நினைக்கிறது. 4 மாநிலங்கள் 1 யூனியன் பிரதேசம் குட்கா ஊழல் புகாரில் தொடர்புடைய வழக்கு என்பதால் சிபிஐ விசாரிக்க இந்த வழக்கு உகந்தது. குட்கா ஊழல் புகாரில் லஞ்ச ஒழிப்புதுறை இது வரை யாரையும் கைது செய்யவில்லை. அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், காவல்துறையினர், பிற மாநில அதிகாரிகள், உணவுபாதுகாபுதுறை அதிகாரிகள் என பலரும் தொடர்பு. இவர்களின் விசாரணையை நாங்கள் குறைசொல்லவில்லை. ஆனால் பிற மாநில அதிகாரிகள் மீது இவர்களால் நடவடிக்கை எடுக்க முடியாது என்பதால் தான் சிபிஐ விசாரணை கோருகின்றேம். ஹவாலா பணபரிமாற்றம் நடந்துள்ளதாக கலால் வரித்துறை தெரிவித்துள்ளதால், சட்ட விரோத பணபரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வருகிறது. அதனால் சிபிஐ தான் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும். லஞ்ச ஒழிப்பு துறையில் உள்ள அதிகாரிகள் டிஜிபிக்கு அறிக்கை அளிக்க வேண்டியதில்லை என்றாலும், அவரக்கு கீழான அந்தஸ்தில் உள்ளவர்கள்தான். டிஜிபி க்கு கீழ் உள்ளவர்களால் எப்படி டிஜிபிக்கு எதிராகவோ, அமைச்சருக்கு எதிராகவோ நடவடிக்கை எடுக்க முடியும். எனவே சிபிஐ விசாரணையே சிறப்பானது.
டிராபிக் ராமசாமி தரப்பு வக்கீல் அர்விந்த் வாதம் : குட்கா பறிமுதல் தொடர்பான விசாரணையில் டிஜிபி தலையிடக்கூடாது என உத்தரவிடக்கோரியும், குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அல்லது சி.பி.ஐ விசாரிக்க வேண்டும்.
இதையடுத்து நீதிபதிகள், எழுத்து பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். வழக்கின் விசாரணை செவ்வாய்க்கிழமை (30ம் தேதிக்கு) தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.
நேற்றைய விதாதத்தை படிக்க...