Advertisment

சென்னையில் சித்த மருத்துவப் பல்கலை: நீதிபதிகள் அதிருப்தி

அனைத்து பல்கலைக் கழகங்களும் சென்னை பகுதியில் அமைந்தால், தென் பகுதி எப்படி வளர்ச்சி அடையும்- நீதிபதிகள் கேள்வி

author-image
WebDesk
New Update
AIADMK Madurai Conference, AIADMK Conference, Petition filed to stay AIADMK Madurai Conference, அ.தி.மு.க மதுரை மாநாட்டுக்கு தடை விதிக்கக் கோரி ஐகோர்ட்டில் மனு, அதிமுக மாநாடு, உயர் நீதிமன்ற மதுரை கிளை, Petition filed to stay AIADMK Madurai Conference

Tamil news live

சித்த மருத்துவப் பல்கலைக் கழகத்தை சென்னையில் அமைப்பதற்கான காரணம் என்ன? என அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. திருநெல்லையில் சித்த மருத்துவ பல்கலைக் கழகம் அமைக்க தமிழக அரசுக்கு கடந்த 2020-ல் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அமர்வு உத்தரவிட்டது.

Advertisment

இந்நிலையில், அரசு கொள்கை முடிவின் அடிப்படையில் சித்த மருத்துவப் பல்கலைக் கழகத்தை சென்னைக்கு மாற்ற முடிவு செய்துள்ளதாகவும், சென்னை மாதவரம் பகுதியில் இட தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அரசு தாக்கல் செய்த புதிய மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள், இதற்கு அதிருப்தி தெரிவித்தனர். சென்னைக்கு சித்த மருத்துவ பல்கலை இடமாற்றம் செய்வதற்கான காரணம் என்ன? என்றும் அனைத்து பல்கலைக்கழகங்களும் சென்னை பகுதியில் அமைந்தால், தென் பகுதி எப்படி வளர்ச்சி அடையும் எனவும் கேள்வி எழுப்பினர். சித்த மருத்துவ பல்கலைக் கழக இடமாற்றத்திற்கான காரணம் குறித்து 2 வாரத்திற்குள் அரசு அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment