கரூர் கூட்ட நெரிசல் துயரம்: விஜய் மீது வழக்குப் பதிவு செய்யாதது ஏன்? சீமான் கேள்வி

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் த.வெ.க தலைவர் விஜய் மீது வழக்குப் பதிவு செய்யாதது ஏன்? என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் த.வெ.க தலைவர் விஜய் மீது வழக்குப் பதிவு செய்யாதது ஏன்? என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

author-image
Nagalekshmi Rajasekar
New Update
seeman

கரூரில் கடந்த மாதம் 27-ஆம் தேதி த.வெ.க தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பொதுமக்கள், தொண்டர்கள் என ஏராளமானோர் திரண்டதால் அப்பகுதியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தமிழ்நாட்டையை உலுக்கியது. இதனிடையே உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு த.வெ.க சார்பில் ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டு அவர்களது வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Advertisment

இதையடுத்து கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேற்று விஜய், மாமல்லபுரத்தில் சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களுக்கு என்ன அடிப்படை தேவை என்பதையும் கேட்டறிந்தார்.மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு மருத்துவம், கல்வி மற்றும் வேலை வாய்ப்பு ஆகியவற்றை ஏற்படுத்தி தருவதாக உறுதியளித்தார். கரூரில் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக விஜய் மீது வழக்குப் பதிவு செய்யாதது ஏன் என நாம் தமிழர் கட்சி  தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது, விஜய் வந்ததால் தானே கூட்டம் அதிகரித்தது. விஜய்யை மக்கள் பார்க்க வந்ததில் தானே கூட்ட நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டது. ஆனால், எஃப்.ஐ.ஆரில் ஏன் விஜய் பெயர் இல்லை? ஆதவ் அர்ஜுனா பெயரும் எஃப்.ஐ.ஆரில் இல்லை. 

கரூரில் காவல்துறை பாதுகாப்பு கொடுக்கவில்லை என்றால் வேனில் ஏறியதும் என்னை பத்திரமாக பாதுகாத்து இங்கு கொண்டு வந்துவிட்ட காவல்துறைக்கு நன்றி என்று சொன்னது யார்? குற்றத்திற்கு காரணமான நபரை விசாரிக்கவில்லை என்றால் இந்த விசாரணை எப்படி இருக்கும் என்று பார்த்துக் கொள்ளுங்கள். கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் விஜய்யை வந்து பார்க்கும் பொழுது சி.பி.ஐ எங்கே போய் விசாரிக்கிறது. சி.பி.ஐ விசாரிக்கிறதா? அல்லது பாதுகாக்கிறதா?  என்று கேள்வி எழுப்பினார்.  

Advertisment
Advertisements
Seeman Vijay

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: