சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குனர் பாலச்சந்திரன் அளித்த பேட்டியின் விபரம் வருமாறு:
ஆந்திரா பகுதிகளில் இயல்பை விட அதிகமாக வெப்ப நிலை பதிவாகி உள்ளது. தமிழ்நாட்டில் வட மேற்கு திசையை நோக்கி வெப்ப காற்று வீசி வருகிறது.
இதனால் கடந்த 24 மணி நேரத்தில் இயல்பை விட அதிகமாக வெப்பம் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக திருத்தணியில் 45 டிகிரி செல்சியஸ் பதிவாகி உள்ளது.
சென்னையை பொறுத்தவரை கடந்த 24 மணி வரை நுங்கம்பாக்கம் 40.1 வெப்பநிலையும், மீனம்பாக்கம் 42.1 வெப்பநிலையும் பதிவாகி உள்ளது.
மேலும் இடியுடன் கூடிய மழை மற்றும் கோடை மழையினால் கடந்த 24 மணி நேரத்தில் வேலூர், சேலம், திருச்சி, நெல்லை, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்து உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மழையின் அளவு: தக்கலை , தாளவாடி - 6 செ.மீ, தேன்கனிக்கோட்டை, சூளைகிரி - 5 செ.மீ , ஈரோடு, விருதுநகர் - 4 செ.மீ
அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் இயல்பை விட 2 அல்லது 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கும். உள் மாவட்டங்களில் இயல்பை விட 3 அல்லது 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகமாக இருக்கும். உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.
சென்னையை பொறுத்தவரை வெப்பநிலை அவ்வப்போது 1 அல்லது 2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கும் . அவ்வப்போது குறையும்.