scorecardresearch

மக்களை அச்சுறுத்திய காட்டு யானை: மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர்

கிருஷ்ணகிரி மாவட்டம் தர்மபுரி சுற்றியுள்ள கிராமங்களில் விவசாய நிலங்களை சேதப்படுத்தி அச்சுறுத்தி வந்த மக்னா காட்டு யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி ஆனைமலை புலிகள் காப்பகம் உலாந்தி டாப்ஸ்லிப் யானை குந்தி வனப்பகுதியில் விட்டனர்.

காட்டு யானை

கிருஷ்ணகிரி மாவட்டம் தர்மபுரி சுற்றியுள்ள கிராமங்களில் விவசாய நிலங்களை சேதப்படுத்தி அச்சுறுத்தி வந்த மக்னா காட்டு யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி ஆனைமலை புலிகள் காப்பகம்       உலாந்தி டாப்ஸ்லிப் யானை குந்தி வனப்பகுதியில் விட்டனர்.

வனப்பகுதியை விட்டு வெளியேறிய மக்னா தனியார் தோட்டங்கள் வழியாக சென்று மதுக்கரையில் மீண்டும் மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் ஆனைமலை புலிகள் காப்பகம் மானாம்பள்ளி வனசரகம் மந்திரி மட்டம் மற்றும் பகுதியில் விட்டனர்.

வால்பாறை சேக்கல் முடி, வில்லோனி பகுதிகளை சுற்றித் திரிந்த மக்னா டாப்சிலிப் வழியாக பொள்ளாச்சி வனச்சரகம் போத்தமடை பீட் தம்மபதி வனபகுதியில் நடமாட்டம், இதையடுத்து ஆனைமலை புலிகள் துணைகள இயக்குநர் பார்கவா தேவ் உத்திரவின்பேரில் வனச்சரகர் புகழேந்தி தலைமையில் 10 பேர் வீதம் என நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டு மக்னா காட்டு யானையை தேடி வருகின்றனர்,டாப்ஸ்லிப் யானைகள் வளர்ப்பு முகாமில் இருந்து மூன்று கும்கி யானைகள் வரவழைக்கப்பட உள்ளது எனவும் தனியார் தோட்டங்களில் உள்ளவர்கள்,மலைவாழ் மக்கள் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் இரவில் வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Wild elephant got by forest officers kovai