/indian-express-tamil/media/media_files/2025/10/11/tamil-nadu-2025-10-11-17-21-25.jpg)
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அண்மையில் தான் காலாண்டு தேர்வு முடிந்து விடுமுறைகளும் முடிந்தன. இந்த விடுமுறையிலேயே ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜைகளும் அடங்கிவிட்டன. இதையடுத்து, அரையாண்டு தேர்விற்கு ரெடியாகி வரும் பள்ளி குழந்தைகள் அடுத்ததாக தீபாவளி விடுமுறைக்காக காத்திருக்கின்றனர். வரும் 20-ஆம் தேதி திங்கட் கிழமை தீபாவளி பண்டிகை வருகின்ற நிலையில், அக்டோபர் 18-ம் தேதி சனிக்கிழமை, 19-ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை மற்றும் 20-ஆம் தேதி திங்கட் கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து , 21-ஆம் தேதியும் விடுமுறை அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, பண்டிகை நாட்களில் சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் மகிழ்ச்சியுடன் பண்டிகைகளை கொண்டாடிவிட்டு திரும்ப வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு விடுமுறை வழங்குவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறை அறிவிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பில் மாணவர்களும், ஊழியர்களும் உள்ளனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எங்கு பார்த்தாலும் பட்டாசு கடைகளும், துணிக்கடைகளும் நிறைந்துள்ளன. இந்த கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. ஏராளமான ஆஃபர்களை துணிகடைகளும், ஆன்லைனும் அள்ளி வீசுகின்றனர். இந்நிலையில் தீபாவளிக்குப் பிறகு தூத்துக்குடி மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி விழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு அக்டோபர் 27-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் கந்தசஷ்டி திருவிழா சூரசம்ஹாரம் நிகழ்ச்சி அக்டோபர் 27-ஆம் நாள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக 27.10.2025 திங்கட்கிழமை தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். இதனால் மாணவர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
ஆனால் அதே சமயம் அத்தியாவசிய பணிகள் மற்றும் அது சார்ந்த பணியாளர்களுக்கு இந்த விடுப்பு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விடுமுறையை ஈடுகட்டும் வகையில் நவம்பர் 8-ம் தேதி இரண்டாவது சனிக்கிழமை வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.