சென்னை ஐஐடி வளாகத்தில் பெண் சடலம்... போலீஸ் அதிர்ச்சி!

விடுதியின் பின்புறத்தில் உள்ள முட்புதரில் இருந்து, 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின்....

அடையாறில், சென்னை ஐஐடி கல்வி நிறுவனம் உள்ளது. ஆசிரியர் குடியிருப்புகள் மற்றும் மாணவர்கள் விடுதியும், கல்லூரி வளாகத்திலேயே அமைந்துள்ளன. அங்கு, எப்போதுமே பாதுகாப்பு அதிகமாக இருக்கும் என்பதால், வெளியாட்கள் யாரும் அவ்வளவு சாதாரணமாக உள்ளே நுழைந்துவிட முடியாது.

இந்நிலையில், அங்குள்ள பிரம்மபுத்திரா விடுதியின் பின்புறத்தில் உள்ள முட்புதரில் இருந்து, 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலம், நேற்று இரவு மீட்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, தகவலறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அந்தப் பெண்ணின் சடலத்தைக் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பாதுகாப்பு நிறைந்த இந்த கல்வி நிறுவனத்தில், ஒரு பெண்ணின் சடலம் முட்புதரில் மறைத்து வைக்கப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

×Close
×Close