Advertisment

சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு பெண்களை காவல் நிலையத்தில் வைக்கக் கூடாது- டி.ஜி.பி. சங்கர் ஜிவால்

சூரியன் உதிக்கும் முன், மறைவுக்குப் பின், பெண்களை கைது செய்யக்கூடாது. பெண்களை, பெண் போலீஸ் அதிகாரிகள் மட்டுமே கைது செய்ய வேண்டும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Chennai

Women should not be summoned after sunset

சந்தேகத்திற்கிடமான அல்லது புகார் அளிக்கும் பெண்களை சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு காவல் நிலையத்தில் வைக்கக் கூடாது, என்று காவல்துறை இயக்குநர் சங்கர் ஜிவால் அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Advertisment

காவல்துறை இயக்குநர் சங்கர் ஜிவால், திங்கள்கிழமை மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில், உத்தரவுக்கு இணங்கத் தவறுபவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.

இந்த முறை ஏற்கனவே நடைமுறையில் உள்ளது, ஆனால் சில அதிகாரிகள் புதிதாக மாவட்ட கண்காணிப்பாளர்களாக அல்லது ரேஞ்ச் டெபுடி இன்ஸ்பெக்டர் ஜெனரலாக சேர்ந்திருக்கலாம் என்பதால் இது மீண்டும் வலியுறுத்துப்படுகிறது…

பெண்கள் உட்பட யாரையும் விசாரணைக்கு அழைக்க காவல்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளது, ஆனால் அவர்கள் தங்கள் வரம்புகளை அறிந்திருக்க வேண்டும் மற்றும் சம்பந்தப்பட்ட நபர்களின் உரிமைகளை கவனத்தில் கொள்ள வேண்டும்.

சூரியன் உதிக்கும் முன், மறைவுக்குப் பின், பெண்களை கைது செய்யக்கூடாது. பெண்களை, பெண் போலீஸ் அதிகாரிகள் மட்டுமே கைது செய்ய வேண்டும். அவர்களை கண்ணியமாக நடத்த வேண்டும்.

பெண்கள் மற்றும் சிறுமியரை கைது செய்ய நேர்தால், விசாரணைக்காக காவல் நிலையம் மற்றும் அவர்களின் வீடுகளுக்கு அழைத்துச் செல்லலாம்; மற்ற இடங்களுக்கு அழைத்துச் செல்லக் கூடாது. 

பெண் போலீசார் தான் பாதுகாப்பு அளிக்க வேண்டும். கைது செய்யப்படும் பெண்களை, பெண் மருத்துவர்கள் மட்டுமே பரிசோதிக்க வேண்டும்.

கர்ப்பிணியாக இருந்தால், கைது நடவடிக்கையை தவிர்க்க வேண்டும். வயிற்றில் இருக்கும் கருவுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்பட்டுவிடக் கூடாது கைதுக்கான காரணங்களை பெண்களிடம் கட்டாயம் தெரிவிக்க வேண்டும்.

பெண்களின் வாக்குமூலங்கள் பெண் அலுவலர்களால் மட்டுமே பதிவு செய்யப்படும், மேலும் அவர்கள் மகளிர் சுயஉதவி குழுக்கள் மூலம் சட்ட உதவி கோரினால் அவர்களுக்கு சட்ட உதவி வழங்கப்படும். சம்பந்தப்பட்ட பெண் உடல் ரீதியாகவோ அல்லது உளவியல் ரீதியாகவோ ஊனமுற்றவராக இருந்தால், அவரது வாக்குமூலம் ஆலோசகர் அல்லது மருத்துவர் முன்னிலையில் பதிவு செய்யப்படும்.

ஆடியோ அல்லது வீடியோ வடிவில் பெண்களின் வாக்குமூலங்களை பதிவு செய்யும் போது, ​​பதிவு செய்யப்பட்ட அறிக்கையில் பெண்கள் கையொப்பமிட வேண்டும் என்று காவல்துறை அதிகாரிகள் வலியுறுத்தக்கூடாது, என்று சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது

சமீபத்தில், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த ஒரு பெண் குடும்பம் டிஜிபி ஜிவாலைச் சந்தித்து, அய்யப்பன் என்ற நபர் மீது வழக்குப் பதிவு செய்ததாக மாத்தூர் போலீஸ் குறித்து புகார் அளித்தது.

பெங்களூரு மற்றும் சித்தூரில் சட்டவிரோதமாக தங்கவைக்கப்பட்ட ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் காவல்துறை அதிகாரிகளால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகவும் அவர்கள் கூறினர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment