Advertisment

கல்லூரி மாணவிகள் டி.பி.யில் புகைப்படம் வைக்க வேண்டாம்: தமிழக மகளிர் ஆணைய தலைவி எச்சரிக்கை

கல்லூரி மாணவிகள் டி.பி.யில் புகைப்படம் வைக்க வேண்டாம் தமிழக மகளிர் ஆணைய தலைவி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Womens commission chairperson said that college students should not use their photos on social media

தமிழக மகளிர் ஆணைய தலைவி குமாரி

மகளிர் சட்டங்கள், மகளிருக்கு அதிகாரமளித்தல் தொடர்பான கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது. இதில், மகளிர் ஆணைய தலைவர் குமாரி கலந்துகொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், “தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கருணாநிதி இவர்களெல்லாம் இல்லையென்றால் நாங்கள் இல்லை.

அவர்களெல்லாம் எங்களுக்காக போராடிய தலைவர்கள். பெண்களுக்கான சொத்து உரிமை எனப் பல சட்டங்களை கூறலாம். இதைப் பற்றியெல்லாம் கல்லூரி பெண்களிடம் விழிப்புணர்வை கூறியுள்ளோம்” என்றார்.

தொடர்ந்து, சைபர் கிரைம் பிரச்னை குறித்து பேசுகையில் சேலத்தில் நடந்த சைபர் கிரைம் ஒன்றை பகிர்ந்துகொண்டார். அப்போது, சேலம் எஸ்.பி. சிவக்குமார் பிரச்னையை சொன்ன 6 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்தார்” என்றார்.

மேலும், கல்லூரி மாணவிகள் சமூக வலைதளத்தில் முகப்பு பக்கத்தில் புகைப்படம் வைக்க வேண்டாம்” எனக் கேட்டுக்கொண்டார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment