பெண்களுக்கான சட்ட ஆலோசனை தர - மக்கள் நீதி மையத்தின் சார்பாக முதன் முதலாக இலவச சட்ட ஆலோசனை மையம் ஆரம்பம் உலகம் முழுவதும் மார்ச் 8 நாளை உலக மகளிர் தினமாக அறிவிக்கப்பட்ட நிலையில் ஆண்டுதோறும் மகளீர் தினம் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர் .
Advertisment
மகளிர் தினத்தில் சமூக அக்கறையுடன் சிறந்து விளங்கும் மகளிர், சாதனைப் பெண்கள் உள்ளிட்டோரை அங்கீகரிக்கும் விதமாக, விருது வழங்கும் நிகழ்ச்சி, கௌரவிப்பு விழாக்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் நகர்புறத்தில் மகளிர் மேம்பாடு சற்று மேலோங்கி இருந்தாலும் மலைவாழ் பழங்குடிகள் கிராமத்தில் மகளிர் மேம்பாடு என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றன.
மலைவாழ் பழங்குடி கிராம பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக, சமூக அக்கறையுடனான மகளிர் தின விழா கொண்டாடப்பட்டன.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மக்கள் நீதி மையத்தின் ஸ்பெசல் ஃபோர்ஸ் பிரிவின் சார்பாக இந்த விழா நடந்திருக்கின்றன. கோவை அடுத்த ஆனைகட்டி மலைப்பகுதியில் அமைந்துள்ள கெம்மனூர் மலைவாழ் பழங்குடி கிராமத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட மலைவாழ் பழங்குடி பெண்களுக்கு மத்தியில் இந்த நிகழ்வு அரங்கேறியது.
இந்த விழாவில் மக்கள் நீதி மையத்தின் சார்பாக தமிழ்நாட்டில் முதன் முறையாக, பெண்களுக்கான இலவச சட்ட ஆலோசனை முகாம் ஆரம்பிக்கப்பட்டு, சட்ட ஆலோசனைகள் தரபட்டன.
இது தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்த மக்கள் நீதி மையத்தினர் திட்டமிட்டிருக்கின்றனர். இந்த இலவச சட்ட ஆலோசனை முகாமில், பெண்களின் அடிப்படை உரிமைகள், பெண்களின் மேம்பாட்டுக்கான திட்டங்கள், பெண்களுக்கான சட்ட உரிமைகள் குறித்து மலைவாழ் பழங்குடியின பெண்களுக்கு எடுத்துரைக்கப்பட்டன.
அது மட்டுமின்றி பெண்கள் அடிப்படை பாதுகாப்பு, மருத்துவ தேவை, சேனிட்டரி நாப்கின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பெண்களுக்கு சேலை, நேப்கின், சட்ட ஆலோசனை நகல் உள்ளிட்டவைகள் பரிசாக வழங்கப்பட்டன. மலைவாழ் பழங்குடிகள் கிராமத்து வாழ் பள்ளி குழந்தைகளுக்கு நோட்டுகள் பரிசாக வழங்கப்பட்டன.
இந்த மகளீர் தினவிழாவில் மக்கள் நீதி மையத்தின் மண்டல செய்தி ஊடகப்பிரிவு செயலாளர் ரம்யா வேணுகோபால் மற்றும் தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.