scorecardresearch

கும்பக்கரை அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை 2 அல்லது 3 நாட்களில் நீங்கும்

கும்பக்கரை அருவியில் குளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை இரண்டு அல்லது மூன்று நாட்களில் நீக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கும்பக்கரை அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை 2 அல்லது 3 நாட்களில் நீங்கும்

கும்பக்கரை அருவியில் குளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை இரண்டு அல்லது மூன்று நாட்களில் நீக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து 8 கிலோ மீட்டர் தூரத்தில் கும்பக்கரை அருவி உள்ளது. இந்த அருவி மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியில் இயற்கை எழில்சூழ அமைந்துள்ளது. இந்த அருவிக்கு கொடைக்கானல் மலைப்பகுதி, வெள்ளகவி, வட்டக்கானல் பகுதியில் இருந்தும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்தும் நீர்வரத்து இருக்கும்.

அருவிக்கு நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குளித்துவிட்டு செல்வார்கள்.

இந்நிலையில், கொடைக்கானல் மலைப் பகுதியில் பெய்து வந்த தொடர் மழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தடுப்பு கம்பிகள் சேதமடைந்தன. இதனை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதால் அங்கு குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டடுள்ளது. இந்த தடை கடந்த 25 நாட்களுக்கும் மேர்லாக தொடர்கிறது.

இதனிடையே, கும்பக்கரை அருவியில் குளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை, மராமத்து பணிகள் நிறைவடைந்ததும், இரண்டு அல்லது மூன்று நாட்களில் நீக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: You can bath two or three days in kumbakarai falls