தனி ஆளாக நின்று செயின் திருடனை பிடித்த சூர்யாவிற்கு போலீசார் அளித்த பரிசு!

ஒரு இரவு சூர்யாவின் வாழ்க்கையை இப்படி மாற்றும் என்று யவருமே நினைக்க வில்லை

சென்னையில்  மருத்துவரிடம் இருந்து  செயினை பறித்துக் கொண்டு ஓடிய திருடனை தனி ஆளாக  பிடித்த சிறுவன் சூர்யாவை போலீசார் தத்தெடுக்கின்றனர்.

கடந்த 17 ஆம் தேதி, அண்ணாநகரில் உள்ள மினி கிளினிக் ஒன்றிற்கு வந்த திருடன்,  டாக்டர் அமுதாவிடம் நோயாளி போல் நடித்து கண் இமைக்கும் நேரத்தில் அவரின் செயினை பறித்துக் கொண்டி ஓடினான். அமுதா அலறிய சத்தம் கேட்டவுடன்  பதறி அடித்துக் கொண்டு ஓடிவந்த சிறுவன் சூர்யா,  திருடனை சுமார் 1 கிலோ மீட்டரை வரை துரத்தி சென்று பிடித்தான்.

தனி ஆளாக  திருடனை சூர்யா பிடிக்கும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி காமிராவில் பதிவாகி இருந்தனர். மறுநாள்   சமூக வலைத்தளங்களில் வெளியான இந்த வீடியோ ஒரே நாளில் வைரலானது. அதன் பின்பு,  சிறுவனின்  வீர தீர செயலை  தமிழ்நாடு காவல் துறையினர் வெகுவாக பாராட்டினர்.

சூர்யாவை நேரில் அழைத்து  வெகுமதியும் அளித்தனர். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் சொன்ன சூர்யா அன்றிரவு என்ன நடந்தது என்பதை பதற்றம் இன்றி விவரித்தார். ” எப்படியாவது டாக்டரின் செயினை திருடனிடம் இருந்து வாங்கி விட வேண்டும் என்ற நோக்கத்துடனே ஓடினே. நான் துரத்தி வருவதைப் பார்த்து அவனும் என்னை தாக்கினான். பதிலுக்கு நான் அவனின் மூக்கில் ஓங்கி  குத்தினேன்.

அவன் மயக்கம் அடைந்து விட்டான். பின்பு தான் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தேன். நான் திருடனை பிடிக்க ஓடும் போது யாருமே உதவிக்கு வரவில்லை. பதிலுக்கு என்னை எல்லோரும் வீடியோ தான் எடுத்தார்கள்” தெரிவித்திருந்தான்.  சூர்யாவின் இந்த பேச்சை கேட்டு காவல் துறையினர் அசந்து போனார்கள்.

பின்பு, அவனின்  பின்புலம் மற்றும் குடும்ப சூழ்நிலை பற்றியும் விசாரித்தனர். அப்போது சிறுவன்  சூர்யா ஏழ்மை நிலை காரணமாக தனது படிப்பை பாதியில் நிறுத்து விட்டு, மெக்கானி ஷாப் ஒன்றில் வேலை செய்து வருவது தெரிய வந்துள்ளது. இந்நிலையில்,   தான்  சூர்யாவை  தத்தெடுத்து தொழில் மேம்பாட்டு பயிற்சி அளிக்க உள்ளனர்.

இதுக் குறித்து பேசியுள்ள காவல் துறை உயர் அதிகாரிகள், “ சிறுவன் சூர்யாவை சமூகவலைத்தளங்களில் பார்த்த பலரும் அவனுக்கு உதவி செய்ய முன் வந்துள்ளனர். அவனின் துணிச்சலையும், தைரியத்தையும் பலரும் பாராட்டியுள்ளனர். .சூர்யாவின் பெயரில், வங்கி கணக்கு துவங்க உள்ளோம். அவனுக்கு, ‘ஏசி’ மெக்கானிக் ஆக வேண்டும் என, விருப்பம் உள்ளது. இதனால், தொழில் மேம்பாட்டு பயிற்சி அளிக்க உள்ளோம் “ என்று கூறியுள்ளார்.

”ஒரு இரவு சூர்யாவின் வாழ்க்கையை இப்படி மாற்றும் என்று யவருமே நினைக்க வில்லை. அவனுக்கு உதவி செய்ய முன்வந்துள்ள காவல் துறையினருக்கு நன்றி என்று” சூர்யாவின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

 

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close