திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகேயுள்ள தலைமலை என்ற இடத்தில் புகழ்பெற்ற பெருமாள் ஆலயம் ஒன்று உள்ளது. இன்று கடைசி புரட்டாசி சனிக்கிழமை என்பதால் திரளான பக்தர்கள் வருகைதந்து அங்கு வழிபாடு மேற்கொண்டிருந்தனர்.
கடல் மட்டத்திலிருந்து 2400 அடி உயரத்திலிருக்கும் இந்த மலையினைச் சுற்றிலும் பக்தர்கள், இரண்டடி இடைவெளி கொண்ட கோயில் சுவற்றைப் பிடித்தவாறு நடந்து சென்று கிரிவலம் மேற்கொள்வது வழக்கம்.
மிகவும் ஆபத்தான இந்த கிரிவலத்தில் சற்று அசந்தாலும், 2000 அடிக்கும் மேல் உள்ள பள்ளத்தில் விழ வேண்டியதுதான். எனினும், இதைப் பற்றி கவலைப்படாத பக்தர்கள், எந்தவித அச்ச உணர்வும் இன்றி கோயிலை சுற்றி வருவார்கள்.
அவ்வாறு இன்று காலை கிரிவலம் மேற்கொண்ட இளைஞர் ஒருவர் எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழும் காட்சி, கோயிலுக்கு வந்த ஒருவரின் செல்போனில் ஏதேச்சையாக பதிவாகியுள்ளது. இந்தக்காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
கீழே விழுந்த நபர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று தெரியாத நிலையில், தீயணைப்புத் துறையினரும், பொதுமக்களும் இளைஞரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
https://www.youtube.com/embed/a_WMFLFk9Ko