நடிகர் ஜெகனின் கார் மோதி இளைஞர் சாவு!

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நடிகர் ஜெகனை காவல்நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்

பிரபல தனியார் தொலைக்கட்சியில் தொகுப்பாளராகவும், திரைப்படங்களில் நடித்து வருபவரான ஜெகன், நேற்று மாலை வந்தவாசி வழியாக சென்னைக்கு காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் தர்கா அருகே உள்ள தாழம்பள்ளம் என்ற இடத்தில் இருசக்கர வாகனத்தின் மீது அவரது கார் மோதியது.

இதில் ஹுசைன் என்ற இளைஞர் படுகாயமடைந்தார். செங்கல்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார்.

ஹுசைன் மினி லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். சொந்த வேலைக்காக இருசக்கர வாகனத்தில் சென்ற போது ஜெகனின் கார் மோதி உயிரிழந்தார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஜெகனை காவல்நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அப்பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

×Close
×Close