scorecardresearch

ரயில் வாசலில் அமர்ந்து செல்போன் பார்க்காதீர்: கொருக்குப்பேட்டையில் இளைஞர் உயிரை பறித்த கொடூரம்

மருத்துவமனையில் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

ரயில் வாசலில் அமர்ந்து செல்போன் பார்க்காதீர்: கொருக்குப்பேட்டையில் இளைஞர் உயிரை பறித்த கொடூரம்

இரண்டு நாட்களுக்கு முன், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மேற்குவங்கத்திலிருந்து சென்னையை நோக்கி வந்த ரயிலில் பயணித்த ரோனி சேட் (வயது 24) என்ற இளைஞர் சென்னைக்குக் கட்டட வேலைப் பார்க்க வந்துகொண்டிருந்தார்.

வழக்கமாக கொருக்குப்பேட்டை பகுதியில் ரயில் சிக்னலுக்காக மெதுவாகச் செல்லும். அப்போது, ரோனி சேட் ரயிலின் படியில் அமர்ந்து தன்னுடையப் போனை பார்த்துக்கொண்டிருந்தார்.

அந்த சமயம் ரயில் தண்டவாளம் அருகே நின்றுகொண்டிருந்த இளைஞர் ஒருவர் அவரின் போனைப் பறித்திருக்கிறார். படியில் அமர்ந்திருந்த ரோனி சேட் செல்போனோடு ரயிலிலிருந்து கீழே விழுந்ததால் தலையில் பலமாக அடிபட்டது.

ரோனி சேட் கீழே விழுந்ததைக் கண்ட சகபயணிகள் கொருக்குப்பேட்டை ரயில்வே போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

சம்பவமறிந்து வந்த காவல்துறை ரோனி சேட்டை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மருத்துவமனையில் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இதையடுத்து அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. மேலும், அவர் உயிரிழந்த சம்பவம் அவரின் உறவினருக்கும் தெரிவிக்கப்பட்டது.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Youth dies after cell phone thief on a train