ஆபாச வீடியோவை அனுப்பி திருமணத்தை நிறுத்திய தடகள வீரர் கைது

தன்னுடன் நெருக்கமாக இருக்கும் ஆபாச வீடியோவை முன்னாள் காதலியின் வருங்கால கணவருக்கு அனுப்பி திருமனத்தை நிறுத்திய தடகள வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தன்னுடன் நெருக்கமாக இருக்கும் ஆபாச வீடியோவை முன்னாள் காதலியின் வருங்கால கணவருக்கு அனுப்பி திருமனத்தை நிறுத்திய தடகள வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை டி.பி.சத்திரம் ஜோதியம்மாள் தெருவை சேர்ந்த தீபக் என்பவர் தடகள வீரர். இவர் தனக்கு பயிற்சி அளித்த தடகள பயிற்சியாளரின் மகளை காதலித்து வந்ததாக தெரிகிறது. இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த நிலையில், தன்னுடன் அப்பெண் நெருக்கமாக இருக்கும் ஆபாச வீடியோவை அவரது வருங்கால கணவருக்கு அனுப்பி திருமணத்தை நிறுத்தியுள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண், கீழ்பாக்கம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், தீபக்கும் தானும் காதலித்து வந்தோம். என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை காட்டி காதலித்து வந்த அவர், குளிர் பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து என்னை பாலியல் வன்கொடுமை செய்து விட்டார். இதனை வீடியோவும் எடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த நான், அவரோடான காதலை முறித்து கொண்டு பிரிந்து விட்டேன்.

இந்த நிலையில், எனக்கு வேறு மாப்பிளை பார்த்து திருமண ஏற்பாடுகள் நடந்தன. இதனை தெரிந்து கொண்ட தீபக், நாங்கள் இருவரும் நெருக்கமாக இருக்கும் காட்சிகளை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டினார். ஆனால், அதனை நான் கண்டு கொள்ளவில்லை. இந்நிலையில், அந்த வீடியோ காட்சிகளை எனக்கு பார்த்த மாப்பிள்ளைக்கு அனுப்பி திருமணத்தை தீபக் நிறுத்தி விட்டார். அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இது தொடர்பாக தீபக் மீது, பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட இந்திய தண்டனைச் சட்டத்தின் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அவர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

×Close
×Close