கணினிகளில் உள்ள முக்கியத் தகவல்களை எடுத்துக் கொண்டு, பின்னர் அதனை மீட்க பணம் பறிக்கும் தாக்குதல்தான் ரேன்சம்வேர் வைரஸ் தாக்குதல். இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரேன்சம்வேர் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் பதிப்பை ஏற்படுத்தின.இதற்கு இந்தியாவும் தப்பவில்லை. 2017-ம் ஆண்டு முதல் 6 மாதங்களில், ஒவ்வொரு 10 நிமிடங்களிலும் ஒரு சைபர் கிரைம் புகார் பதிவானது என தகவல் (Indian Computer Emergency Response Team) தெரிவிக்கின்றன. கடந்த 2016-ம் ஆண்டு ஒவ்வொரு 12 நிமிடத்திற்கும் 1 சைபர்கிரைம் புகார் பதிவானது என்றும், 2017-ம் ஆண்டு சைபர்கிரைம் புகார் பதிவாவது அதிகரித்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக பாஸ்வேர்டு குறித்த அவசியத்தை இணையதள பயன்பாட்டாளர்கள் முக்கியத்துவமாக எடுத்துக் கொள்வதில்லை. எளிதாக நினைவில் வைத்துக் கொள்ளும் வகையில், பாதுகாப்பு இல்லாத பாஸ்வேர்டை பயன்படுத்துகின்றனர். இது சில சமங்களில் அவர்களின் டேட்டா-க்களுக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடுகிறது.
இந்த நிலையில், 2016-ம் ஆண்டு பாதுகாப்பில்லாத வகையில் அதிகமாக பயன்படுத்தப்பட்ட பாஸ்வேர்டு குறித்து பார்க்கலாம். 2016-ம் ஆண்டு அதிகமாக பயன்படுத்தப்பட்ட டாப் 25 பாஸ்வேர்டுகள் குறித்த பட்டியலை கீப்பர் செக்யூரிட்டி ( Keeper Security) வெளியிட்டுள்ளது.
- 1. 12345
- 2. 123456789
- 3. qwerty
- 4. 12345678
- 5. 111111
- 6. 1234567890
- 7. 1234567
- 8. password
- 9. 123123
- 10. 987654321
- 11. qwertyuiop
- 12. mynoob
- 13. 123321
- 14. 666666
- 15. 18atcskd2w
- 16. 7777777
- 17. 1q2w3e4r
- 18. 654321
- 19. 555555
- 20. 3rjs1la7qe
- 21. google
- 22. 1q2w3e4r5t
- 23. 123qwe
- 24. zxcvbnm
- 25. 1q2w3e
இதுபோன்ற பாதுகாப்பற்ற பாஸ்வேர்டை இன்னமும் பயன்படுத்தி வந்தால், அதனை மாற்றுவது தான் உங்களுக்கு இருக்கக்கூடிய ஒரே ஆப்ஷன்.