இந்த மாதத்தில் (ஆகஸ்ட்) பூமியை சில பெரிய சிறுகோள்கள் கடந்து செல்ல உள்ளன. நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தின் படி, 5 சூப்பர்ஜெயண்ட் சிறுகோள்கள் பூமியை நெருங்கி வருகின்றன.
பல்வேறு அளவுகளில் உள்ள இந்த சிறுகோள்கள் ஆகஸ்ட் 8 மற்றும் ஆகஸ்ட் 13-க்கு இடையில் பூமியை கடந்து செல்ல உள்ளன. இந்த சிறுகோள்களில் மிகப்பெரியது - 2024 KH3 என்ற சிறுகோள் ஆகும். இது தோராயமாக 610 அடி, சுமார் வானளாவிய கட்டிடத்தின் அளவு இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
2024 KH3 சிறுகோள் ஆகஸ்ட் 10 அன்று பூமியைக் கடக்க வாய்ப்புள்ளது. சிறுகோள் ஒப்பீட்டளவில் நெருங்கிய சந்திப்பைக் கொண்டிருக்கும் போதிலும், அது பாதுகாப்பாக கடந்து செல்லும் என வகைப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் ஆபத்து ஏதும் இல்லை. ஆகஸ்டு 10ஆம் தேதி பூமியில் இருந்து குறைந்தபட்சம் 5.6 மில்லியன் கிமீ தூரத்தை இந்த பெரிய சிறுகோள் கடந்து செல்ல உள்ளது.
இதேபோல், 2024 ON2 என பெயரிடப்பட்ட சுமார் 120 அடி விட்டம் கொண்ட ஒரு விமானம் அளவிலான சிறுகோள் ஆகஸ்ட் 12 அன்று பூமிக்கு மிக அருகில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது சுமார் 6.8 மில்லியன் கிமீ தொலைவில் கடக்கும்.
2024 PK1 என பெயரிடப்பட்ட சுமார் 110 அடி விட்டம் கொண்ட மற்றொரு சிறுகோள் ஆகஸ்ட் 10 ஆம் தேதி பூமிக்கு மிக அருகில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்றொன்று 2024 PN1 என்ற சிறுகோள் தோராயமாக 86 அடி விட்டம் கொண்டது மற்றும் ஆகஸ்ட் 8 அன்று பூமிக்கு மிக அருகில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2024 PS1 என பெயரிடப்பட்ட சுமார் 58 அடி விட்டம் கொண்ட வீடளவு சிறுகோள், ஆகஸ்ட் 13 அன்று பூமிக்கு மிக அருகில் வரும். இது சுமார் 1.3 மில்லியன் கிமீ தொலைவில் கடந்து செல்லும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.