5G Sim Card scam: இந்தியாவில் 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளது. ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் சில நகரங்களில் 5ஜி சேவையை வழங்க தொடங்கியுள்ளன. இந்நிலையில் 5ஜி சிம் கார்டு மோசடிகள் நடைபெறுவதாக சைபர் கிரைம் காவல்துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
4ஜி-இல் இருந்து 5ஜி சிம் கார்டு மாற்றித்தருவதாக கூறி வங்கி கணக்கு விவரங்களைப் பெற்று மோசடி கும்பல் பணம் மோசடியில் ஈடுபடுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சைபர் கிரைம் பிரிவு காவல்துறையினர் கூறுகையில், “நாட்டில் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் 5ஜி சேவையைப் பெற ஆர்வமாக உள்ளனர். இதைப் பயன்படுத்தி மோசடி கும்பல் மக்களை ஏமாற்றுகின்றனர். 4ஜி-இல் இருந்து 5ஜி சிம் கார்டு (5ஜி நெட்வொர்க்கிற்கு) மாற்றித் தருவதாக கூறி செல்போனுக்கு மெசேஜ் அனுப்புகின்றன.
லிங்க்-உடன் கூடிய மெசேஜ் அனுப்புகின்றன. மக்களும் இதை நம்பி 5ஜி பெறும் ஆர்வத்தில் இந்த லிங்க்-யை கிளிக் செய்கின்றன. OTP உள்ளிட்டவைகள் பெறப்பட்டு அதை கொடுக்கையில் வங்கி கணக்கு விவரங்களை கேட்டு அதையும் நிரப்பி கொடுக்கையில் வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கப்படுகிறது. மோசடி கும்பல் இதை செய்து வருகிறது. மக்கள் இதை நம்பி மோசடியில் சிக்க வேண்டாம்.
சந்தேகத்திற்குரிய லிங்க் உடன் மெசேஜ் அல்லது கால் வந்தால் மக்கள் அதை தொடர்பு கொள்ள வேண்டாம். OTP, வங்கி கணக்கு விவரங்கள் உள்ளிட்டவற்றை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். 4ஜி-இல் இருந்து 5ஜி சிம் கார்டு மாற்றித்தருவதாக கூறி வரும் செய்திகளை நம்ப வேண்டாம் ” என காவல்துறையினர் எச்சரிக்கை செய்கின்றனர்.
உண்மையில் 5ஜி பயன்படுத்த புது சிம் கார்டு தேவையா?
இதையும் படிங்க: Jio 5G and Airtel 5G Plus now available: 5ஜி பயன்படுத்த புது சிம் வாங்கனுமா? நிறுவனங்கள் கூறுவது என்ன?