Advertisment

5G Speed in India: எகிறும் 5ஜி ஸ்பீடு.. 500 Mbps-யை எட்டுகிறது.. ஓக்லா அறிக்கை

5G Speed in India: ஓக்லா (Ookla Speedtest Intelligence) அறிக்கையின்படி 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ள பெரும்பாலான நகரங்களில் ஏர்டெல் 5ஜியை விட ஜியோ 5ஜி வேகமாக உள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.

author-image
sangavi ramasamy
New Update
5G Speed in India: எகிறும் 5ஜி ஸ்பீடு.. 500 Mbps-யை எட்டுகிறது.. ஓக்லா அறிக்கை

இந்தியாவில் 5ஜி சேவை கடந்த அக்டோபர் 1ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் சேவையை தொடங்கியுள்ளன. ஜியோ 4 நகரங்களிலும், ஏர்டெல் 8 நகரங்களிலும் சேவையை தொடங்கியுள்ளன. ஜியோ ஸ்டேண்ட் அலோன் முறையிலும், ஏர்டெல் நான்- ஸ்டேண்ட் அலோன் முறையிலும் சேவை வழங்குகின்றன.

Advertisment

இந்நிலையில் ஓக்லா நிறுவனம், ஜியோ மற்றும் ஏர்டெல் 5ஜி நெட்வொர்குகளின் ஸ்பீடு சோதனை மேற்கொண்டது. அதில், இந்தியாவில் 5ஜி 500 Mbps வேகத்தை எட்டியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

ஓக்லா நிறுவனம் ஜியோ, ஏர்டெல் 5ஜி சேவை வழங்கப்பட்டுள்ள 4 நகரங்களில் (Ookla Speedtest Intelligence) சோதனை மேற்கொண்டது. (Median 5G download) சராசரி டவுன்லோட் வேகத்தை கணக்கிட்டது. டெல்லி, மும்பை, கொல்கத்தா, வாரணாசி ஆகிய 4 நகரங்களில் சோதனை மேற்கொண்டது.

அறிக்கையின் படி, டெல்லியில், ஏர்டெல் 5ஜி சராசரி வேகம் கிட்டத்தட்ட 200 எம்பிபிஎஸ் ஆகவும், ஜியோ சராசரி வேகம் 600 எம்பிபிஎஸ் ஆகவும் உள்ளது. கொல்கத்தா நகரில், ஏர்டெல்லின் சராசரி பதிவிறக்க வேகம் (download Speed) வெறும் 33.83 Mbps ஆகவும், ஜியோவின் பதிவிறக்க வேகம் 482.02 Mbps ஆகவும் உள்ளது.

மும்பை பொறுத்தவரை ஏர்டெல் 271.07 Mbps ஆகவும், ஜியோ 515.38 Mbps ஆகவும் உள்ளது. வாரணாசியில் ஏர்டெல், ஜியோ 5ஜி வேகம் ஒரேமாதிரியாக ஓரளவு நெருக்கிய வருகிறது. ஜியோ 485.22 Mbps ஆக உள்ளது. அதேசமயம் ஏர்டெல் 516.57 Mbps சராசரி டவுன்லோட் வேகம் கொண்டுள்ளது.

இதையும் படிங்க

4ஜி யை விட 5ஜி அதி வேகத்தில் செயல்படுகிறது. இருப்பினும் ஸ்பீட்டெஸ்ட் குளோபல் இன்டெக்ஸ் அறிக்கையின்படி, அதாவது மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா சராசரியாக 13.52 மொபைல் டவுன்லோட் வேகத்துடன் 117-வது இடத்தில் உள்ளது. இருப்பினும் இது எதிர்காலத்தில் மாறுபடலாம் எனக் கூறப்படுகிறது. நாடு முழுவதும் 5ஜி சேவை வழங்கப்பட்ட பிறகு, இது மாறுபடக்கூடும்எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment