Advertisment

116 போன்களில் நேரடியாக 5G பயன்படுத்தலாம்? எந்ததெந்த போன்கள் தெரியுமா?

5G smartphones: ரியல் மி, ஜியோமி, விவோ, ஓபோ எனப் பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த 116 ஸ்மார்ட்போன்களில் நேரடியாக 5ஜி பயன்படுத்த முடியும். எந்ததெந்த போன்கள் என்ற விவரம் குறித்து இங்கு பார்ப்போம்.

author-image
sangavi ramasamy
புதுப்பிக்கப்பட்டது
New Update
OnePlus 11 launch event date time and venue

5ஜி நெட்வொர்க் ஸ்மார்ட்போன்கள்.

இந்தியாவில் 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளது. ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் முதற்கட்டமாக சில நகரங்களில் 5ஜி சேவையை தொடங்கியுள்ளன. ஏர்டெல் டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், சிலிகுரி, நாக்பூர் மற்றும் வாரணாசி ஆகிய 8 நகரங்களில் 5ஜி பிளஸ் சேவையை வழங்குகிறது.

Advertisment

ரிலையன்ஸ் ஜியோ தற்போது மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் வாரணாசி ஆகிய 4 நகரங்களில் சேவையைத் தொடங்கியுள்ளது. ஏர்டெல் 5ஜி பிளஸ் (Airtel 5G Plus) என்ற பெயரிலும், ரிலையன்ஸ் ஜியோ, ஜியோ True 5ஜி (Jio True 5G)என்ற பெயரிலும், 5ஜி சேவை பயனர்களுக்கு வழங்கி வருகின்றன.

ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் படிப்படியாக அனைத்து பகுதிகளுக்கு சேவையை விரிவுபடுத்துவதாக தெரிவித்துள்ளன.

பயனர்கள் தங்கள் போனில் 5ஜி சேவையை பயன்படுத்த புதிய சிம் கார்டு எதுவும் தேவையில்லை, தற்போது பயன்படுத்தும் 4ஜி சிம் கொண்டு 5ஜி சேவையை பெறலாம் எனத் தெரிவித்துள்ளன. 4ஜியை விட ஏர்டெல் 5ஜி

பிளஸ் 20 முதல் 30 மடங்கு வேகமாக இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும், பயனர்கள் தற்போது 4ஜி ரீசார்ஜ் திட்டத்திலேயே 5ஜி பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது.

Ookla இன் அறிக்கையின்படி, டெல்லியில் ஏர்டெல் 5ஜி பிளஸ் பதிவிறக்க வேகம் 197.98mbps ஆகவும், மும்பையில் 271.07mbps ஆகவும் இருக்கிறது. அதிகபட்சமாக வாரணாசியில் 516.57mbps ஆக வேகம் உள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.

இந்தநிலையில், அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் 5ஜி சேவை பயன்படுத்த முடியாது. காரணம் 5ஜி பயன்படுத்துவதற்கான சாப்ட்வேர் அப்டேட் இன்னும் செய்யப்படவில்லை. ஆப்பிள் நிறுவனம் ஐபோன்களுக்கு வரும் டிசம்பர் மாதம் 5ஜி அப்டேட் வெளியிடுவதாக கூறியுள்ளது. சில நிறுவனங்கள், சாம்சங் போன்ற ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தங்களுடைய 5ஜி ஆதரவு போன்களுக்கு நவம்பர் மாதத்தில் 5ஜி அப்டேட் வழங்குவதாக கூறியுள்ளது.

இந்தநிலையில், ரியல் மி, ஜியோமி, விவோ, ஓபோ போன்ற நிறுவனங்களின் 116 போன்களில் 5ஜி சேவையை நேரடியாக பயன்படுத்தலாம். அதாவது இந்த போன்களில் ஏற்கனவே 5ஜி சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது. அதனால் நேரடியாக தேவையைப் பயன்படுத்தலாம்.

கீழ் கொடுக்கப்பட்டுள்ள நிறுவன போன்களில் நேரடியாக 5ஜி சேவைப் பயன்படுத்தலாம்.

ரியல்மி ஸ்மார்ட்போன்கள் (Realme smartphones)

Realme 8s 5G, Realme X7 Max 5G, Realme Narzo 30pro 5G, Realme X7 5G, Realme X7pro 5G, Realme 8 5G, Realme X50 Pro, Realme GT 5G, Realme GT ME, Realme GT NEO2, Realme 9 5G, Realme 9 Pro, Realme 9 Pro Plus, Realme Narzo 30 5G, Realme 9 SE, Realme GT2, Realme GT 2 pro, Realme GT NEO3, Realme Narzo 50 5G, Realme Narzo 50 pro, Realme 9i GT, Realme GT Neo 3T, Realme GT Neo 3T 150W. இந்த மாடல் போன்களில் நேரடியாக 5ஜி சேவையைப் பயன்படுத்தலாம்.

ஜியோமி ஸ்மார்ட்போன்கள் (Xiaomi smartphones)

Xiaomi Mi 10, Xiaomi Mi 10i, Xiaomi Mi 10T, Xiaomi Mi 10T Pro, Xiaomi Mi 11 Ultra, Xiaomi Mi 11X Pro, Xiaomi Mi 11X, Xiaomi Mi 11 Lite NE, Redmi Note 11T 5G, Xiaomi 11T Pro, Xiaomi 11i HyperCharge, Redmi Note 10T, Redmi Note 11 Pro Plus, Xiaomi 12 Pro, Xiaomi 11i, Redmi 11 Prime + 5G, Redmi K50i

Poco smartphones

Poco M3 Pro 5G, Poco F3 GT, Poco M4 5G, Poco M4 Pro 5G, Poco F4 5G, Poco X4 Pro

விவோ ஸ்மார்ட்போன்கள் (Vivo smartphones)

Vivo X50 Pro , Vivo V20 Pro , Vivo X60 Pro+ , Vivo X60 , Vivo X60 Pro , Vivo V21 5G , Vivo V21e , Vivo X70 Pro , Vivo X70 Pro+ , Vivo Y72 5G , Vivo V23 5G , Vivo V23 Pro 5G , Vivo V23e 5G , Vivo T1 5G, Vivo Y75 5G, Vivo T1 Pro, Vivo X80, Vivo X80 Pro, Vivo V25, Vivo V25 Pro, Vivo Y55 5G, Vivo Y55s 5G.

iQOO smartphones

iQOO 3 5G, iQOO 7, iQOO 7 Legend, iQOO Z3, iQOO Z5 5G, iQOO 9 Pro, iQOO 9, iQOO 9 SE, iQOO Z6, iQOO 9T.

ஒன்பிளஸ் (OnePlus smartphones)

OnePlus Nord, OnePlus 9, OnePlus 9 Pro, OnePlus Nord CE, OnePlus Nord CE 2, OnePlus 10 Pro 5G, OnePlus Nord CE Lite 2, OnePlus 10R, OnePlus Nord 2T, OnePlus 10T, OnePlus 9RT.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment