scorecardresearch

IPL 2023: பிரத்தியேக ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்திய ஜியோ.. விவரம் உள்ளே!

ஐ.பி.எல் போட்டி தொடங்குவதை முன்னிட்டு ரிலையன்ஸ் ஜியோ 6 புதிய மொபைல் ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது.

Reliance Jio
Reliance Jio

ஐ.பி.எல் 2023 போட்டிகள் மார்ச் 31-ம் தேதி முதல் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் குஜராத்- சென்னை அணிகள் மோதுகின்றன. மற்ற போட்டிகளை காட்டிலும் ஐ.பி.எல் போட்டி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்திய அணிகள் வெவ்வேறு அணிகளாக பிரிந்த விளையாடுவர். இப்போட்டிகளை டிவியில் நேரடியாக காணலாம். மொபைல் போன் மூலமும் நேரடியாக பார்க்கலாம். அந்தவகையில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஐ.பி.எல் போட்டிகளை டிஜிட்டல் ஸ்ரிமிங் செய்து வருகிறது. தற்போது ஜியோ சினிமா செயலி மூலமும் ஐ.பி.எல் போட்டிகளை நேரலையில் காணலாம். இதற்காக ஜியோ 6 புதிய மொபைல் ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ ரூ. 219 திட்டம்

ரிலையன்ஸ் ஜியோ கிரிக்கெட் பிளான் ரூ. 219 திட்டமானது 14 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் ரூ. 219 ரீசார்ஜ் செய்தால், அன்லிமிடெட் காலிங், ஒரு நாளைக்கு 3ஜிபி டேட்டா கூடுதலாக 5ஜி டேட்டா சேவையும் வழங்குகிறது. மேலும் 2ஜிபி கூடுதல் டேட்டாவுடன் ரூ.25 வவுச்சர் பேக் வழங்குகிறது.

ரூ. 399 திட்டம்

இந்த திட்டமானது ஒரு நாளைக்கு 3ஜிபி 4ஜி டேட்டாவுடன் அன்லிமிடெட் காலிங் மற்றும் 5ஜி சேவை வழங்குகிறது. கூடுதலாக, 6ஜிபி டேட்டாவை வழங்கும் 61 ரூபாய்கான வவுச்சரையும் பெறுவார்கள். இந்த திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது.

ரூ. 999 திட்டம்

இது ரிலையன்ஸ் ஜியோவின் மிகவும் விலையுயர்ந்த கிரிக்கெட் திட்டம் ஆகும். 84 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ள இத்திட்டத்தில் ஒரு நாளைக்கு 3ஜிபி 4ஜி டேட்டாவுடன் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவும் கிடைக்கிறது. மேலும் அன்லிமிடெட் காலிங் வசதி உள்ளது. அதோடு 40ஜிபி டேட்டா வழங்கும் 241 ரூபாய்கான இலவச வவுச்சர் பேக் வழங்குகிறது.

ரிலையன்ஸ் ஜியோ கிரிக்கெட் திட்டத்தில் 3 ரீசார்ஜ் திட்டங்களும் 3 add-on வவுச்சர் திட்டங்களையும் வழங்கி உள்ளது.

ரூ.222 டேட்டா add-on வவுச்சர்

add-on வவுச்சர்கள் நம்முடைய base ரீசார்ஜ் திட்டம் முடிவடையும் வரை வேலிடிட்டி இருக்கும். ரூ.222 டேட்டா add-on வவுச்சரில் 50ஜிபி டேட்டா கூடுதலாக கிடைக்கும்.

ரிலையன்ஸ் ஜியோ ரூ.444 டேட்டா add-on வவுச்சர்

இந்த திட்டம் அடிப்படை திட்டத்தில் 100ஜிபி கூடுதல் டேட்டாவை வழங்குகிறது. மேலும், இந்த திட்டத்தில் புதிதாக தனி திட்ட வேலிடிட்டி கொண்டுள்ளது. இந்த add-on வவுச்சர் பயன்படுத்தினால் 60 நாட்களுக்குள் பயன்படுத்தி முடிக்க வேண்டும்.

ரூ.667 டேட்டா ஆட்-ஆன்

ரூ.667 என்பது கிரிக்கெட் திட்டங்களுடன் அறிவிக்கப்பட்ட மிக விலையுயர்ந்த டேட்டா வவுச்சராகும். இது 90 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இத்திட்டத்தில் 150ஜிபி கூடுதல் டேட்டாவை கிடைக்கப் பெறும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: 6 mobile plans from reliance jio for ipl 2023