scorecardresearch

பப்ளிக் வைஃபையில் ஆபத்து இருக்கு.. பாதுகாப்பாக பயன்படுத்த இதை தெரிஞ்சுகோங்க!

public Wi-Fi பப்ளிக் வைஃபை அதாவது பொது இடங்களில் வழங்கப்படும் இலவச வைஃபை நெட்வொர்க் பயன்படுத்தும் முன் நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்து இங்கு காணலாம்.

public Wi-Fi
public Wi-Fi

நம் அன்றாட வாழ்க்கையில் ஸ்மார்ட்போன் இன்றியமையாததாக மாறிவிட்டது. எல்லாம் நவீன மயமாக்கப்பட்டு வருகிறது. இன்டர்நெட் புரட்சி நடந்து வருகிறது. அந்த வகையில் வைஃபை பற்றி நம் அனைவருக்கும் தெரியும். மக்களின் வசதிக்காக பொது இடங்களிலும் (பப்ளிக் வைஃபை) இலவச வைஃபை வழங்கப்படுகிறது. ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், விமான நிலையங்களில் இலவச வைஃபை வழங்கப்படுகிறது. குறிப்பாக தொலைதூரம் பயணம் செய்யும் போது நம்முடைய மொபைல் டேட்டா அவ்வளவாக சிக்னல் கிடைக்காது. அந்த சமயங்களில் பொது வைஃபை பயன்படுத்த வேண்டி இருக்கும். ஆனால் பொது வைஃபை பாதுகாப்பானதா என்பது நமக்கு தெரியாது. இந்தநிலையில், பொது வைஃபை நெட்வொர்க் பயன்படுத்தும் முன் நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.

Turn off automatic connection

Wi-Fi நெட்வொர்க் கிடைக்கும்போது உங்கள் போன் தானாகவே அந்த நெட்வொர்க்கில் கனெக்ட் ஆகிவிடும் போது உங்கள் தரவுகளை பப்ளிக் வைஃபை மூலம் திருட வாய்ப்புள்ளது. தனிப்பட்ட தரவுகள் திருட வாய்ப்புள்ளது என நிபுணர்கள் கூறுகின்றனர். அதனால் உங்கள் போன் செட்டிங்கஸ் சென்று automatic Wi-Fi connection ஆப்ஷனை Turn off செய்து வைக்கவும்.

Only connect to trusty networks

உங்கள் போனை எடுத்துக் கொண்டு பிஸியான பகுதிக்கு சென்று வைஃபை ஆன் செய்து பாருங்கள். நிறைய ஓபன் நெட்வொர்க்
வைஃபை கிடைக்கும். இலவசமாக டேட்டா கிடைக்கும்போது யாராவது பயன்படுத்தாமல் இருப்பார்களா? ஆனால் அவ்வாறு செய்வது உங்கள் தரவுகள் ஹேக்கர்களுக்கு வெளிப்படுத்தலாம். ஹேக்கர்கள் “இலவச வைஃபை” மூலம் தரவுகள் பெறுவது எளிதானது. அதனால் நம்பத்தகுந்த இணையத்தை மட்டும் பயன்படுத்த வேண்டும்.

Turn off sharing

வைஃபை மூலம் பைல் ஷேரிங் மிகவும் எளிதானது, விரைவாக செய்து முடிக்க முடியும். ஆனால் public Wi-Fi மூலம்
செய்வது ஆபத்தானது. பொது வைஃபையில் தொடர்ந்து ஷேர் செய்து வருகிறீர்கள் என்றால், உங்கள் பைல் folders அனைவராலும் பார்க்க முடியும். பொது வைஃபையில் இணைப்பதற்கு முன் பைல் ஷேரிங்கை நிறுத்த வேண்டும்.

Avoid signing into online banking sites

பொது வைஃபையில் வங்கி பரிவர்த்தனை செய்வது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். வங்கி கணக்குகளை பயன்படுத்துவதை தவிர்கக வேண்டும். உங்கள் இணையதளம் பாதுகாப்பானதாக இருந்தாலும்,
பொது வைஃபையில் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் ஹேக் செய்யப்பட்ட வாய்ப்புகள் உள்ளன.

Use a VPN

பொது வைஃபை நெட்வொர்க்கில் உங்கள் தகவலைப் பாதுகாப்பாக வைத்திருக்க VPN பெரிதும் உதவுகிறது. அதோடு பயன்படுத்துவதும் எளிமையானதும் கூட. பாதுகாப்பான என்க்ரிப்ட் செய்யப்பட்ட நெட்வொர்க்கிற்கு உங்கள் தரவை VPN மாற்றுகிறது. Android, iOS, Windows அல்லது macOS என எல்லா தளங்களிலும் VPN பயன்படுத்தலாம். மேலும் உங்கள் ஸ்மார்ட்போனை எப்போதும் சமீபத்திய வெர்ஷனுக்கு அப்டேட் செய்து வைப்பது பாதுகாப்பானதாக இருக்கும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: 7 things to keep in mind before connecting to a public wi fi