Advertisment

ஆதார்- பான் இணைப்பில் இந்த சிக்கலா? உங்களுக்கு மட்டும் அவகாசம்; உடனே இதை பண்ணுங்க!

நேற்றைய தினம் ஆதார்- பான் இணைக்கும் போது வங்கி பரிவர்த்தனை பிரச்சனை ஏற்பட்டதாக பயனர்கள் புகார் தெரிவித்த நிலையில் வரிமான வரித்துறை அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.

author-image
sangavi ramasamy
புதுப்பிக்கப்பட்டது
New Update
aadharpandcardlink

Aadhar- PAN link

பான் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பதற்கான நீட்டிக்கப்பட்ட காலக்கெடு (ஜுன் 30) நேற்றுடன் முடிவடைந்தது. இதை செய்ய தவறும் பட்சத்தில் இன்று (ஜூலை 1) முதல் பான் அட்டை செயலற்றதாகி விடும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்தநிலையில் நேற்று அதிகமான பயனர்கள் ஆதார்- பான் இணைப்பு செய்துள்ளனர்.

Advertisment

ரூ.1000 அபராதம் செலுத்தி இணைக்க ஆவணங்களை இணைக்கும் போது பலர் சிக்கல்களை எதிர்கொண்டனர். இப்பிரச்சனையை எவ்வாறு சரி செய்வது என்று தெரியாமல் பலரும் தவித்தனர். இந்தநிலையில் வங்கி பரிவர்த்தனை பிரச்சனை மற்றும் இதர சிக்கல்களுக்கு உதவ வருமான வரித்துறை அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.

அதன் படி, வரிமான வரித்துறை வெளியிட்ட ட்விட் பதிவில், "ஆதார்-பான் இணைப்புக்கான கட்டணத்தைச் செலுத்திய பிறகு, பயனர்கள் அதற்கான காசோலை ( challan) ஒப்புதல் டவுன்லோடு செய்யமுடியாமல் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

அதன் படி, வரிமான வரித்துறை அதிகாரப்பூர்வ பக்கத்திற்கு சென்று லாக்கின் செய்து ' இ-பே டேக்ஸ்' என்ற பக்கத்திற்கு செல்லவும். அப்போது வங்கி பரிவர்த்தனை விவரங்கள் காண்பிக்கப்படும். பணம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டிருந்தால் நீங்கள் ஆதார்- பான் இணைப்பை தொடரலாம்.

தொடர்ந்து, challan ரசீதை பயனர்கள் டவுன்லோடு செய்யத் தேவையில்லை. பணம் செலுத்தப்பட்டவுடன் உங்கள் இ-மெயிலுக்கு தகவல் அனுப்பபடும் என்று கூறியுள்ளது.

மேலும், 30.06.2023க்குள் பணம் செலுத்தப்பட்டு, ஒப்புதலும் பெறப்பட்டு ஆனாலும் 30.06.2023 வரை ஆதார்-பான் இணைப்படவில்லை என்றால் வரிமான வரித்துறை அதை பரிசீலனை செய்யும்.

இது போன்ற சிக்கல்கள் மற்றும் மேலும் விவரங்களுக்கு உங்கள் விவரங்கள், பான் மற்றும் மொபைல் எண் ஆகியவற்றை orm@cpc.incometax.gov.in என்ற அதிகாரப்பூர்வ இ-மெயில் பக்கத்திற்கு அனுப்பி உதவியை பெறலாம்" என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Aadhar Pan Link Aadhaar Card
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment