அப்டேட் செய்யப்பட்ட ஆதார் கார்ட்டை ஆன்லைனில் எடுத்துக் கொள்ளும் வசதி அறிமுகம்!

மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட இந்த திட்டம் நாடு முழுவதும் செயல்பாட்டில் இருந்து வருகிறது.

உங்களின் ஆதார் கார்டில் முகவரி,மொபைல் எண் போன்றவற்றை மாற்றம் செய்திருந்தால், அப்டேட் செய்யப்பட்ட ஆதார் காட்டை ஆன்லைன் மூலமே பெற்றுக் கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஆதார் கார்டின் சேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. ரேஷனில் தொடங்கி வேலை செய்யும் இடம் வரை ஆதார் இல்லை என்றால் எதுவும் நடக்காது. மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட இந்த திட்டம் நாடு முழுவதும் செயல்பாட்டில் இருந்து வருகிறது.

இந்நிலையில் ஆதார் கார்டுகளை பெற்ற பொதுமக்கள் பலருக்கு வீட்டு முகவரி மற்றும் மொபைல் எண்கள் தவறாக பதிவிடப்பட்டிருந்தது. இந்த பிழைகளை சரி செய்துக் கொள்ள மத்திய அரசு சார்பில் கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பிழை திருத்தப்ப்ட்ட ஆதார் கார்டுக்களை தற்போது ஆன்லைன் மூலமாகமே பதிவிறக்கம்(Download) செய்துக் கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட்டடுள்ளது.

டவுன்லோட் செய்வது எப்படி?

1. ஆதார் கார்டுக்கான //www.uidai.gov.in/ வெப்சைட்டுக்குள் சென்று லாகின் செய்ய வேண்டும்.

2. பின்பு, அதில் ஆதார் அப்டேட் இஸ்ட்ரியை (aadhar update history) கிளிக் செய்ய வேண்டும்ம்’

3. அதில், உங்களின் ஆதார் நம்பர் மற்றும் திரையில் தோன்று பாஸ்வேர்ட் நம்பரையும் பதிவு செய்ய வேண்டும்,

4.இபோது நீங்கள் பதிவு செய்திற்கு மொபைல் நம்பருக்கு ஓடிபி (OTP) நம்பர் சென்றிருக்கும்.

5. அதை மூன்றாவது கட்டத்தில் பதிவு செய்தால், நீங்கள் அப்டேட் செய்த ஆதார் கார்டு திரையில் தோன்றும்.

6. இப்போது அதை நீங்கள் டவுன்லோட் செய்துக் கொள்ளலாம்.

×Close
×Close