Advertisment

சைக்கிளிங் செய்து போன், லேப்டாப் சார்ஜ் செய்யலாம்.. பைக் டெஸ்க் பற்றி தெரியுமா?

ஏசரின் (Acer) ஸ்மார்ட் பைக் டெஸ்க் மூலம் சைக்கிளிங் செய்து உங்கள் லேப்டாப் மற்றும் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்யலாம்.

author-image
sangavi ramasamy
New Update
சைக்கிளிங் செய்து போன், லேப்டாப் சார்ஜ் செய்யலாம்.. பைக் டெஸ்க் பற்றி தெரியுமா?

ஏசர் eKinekt BD3 என்ற புது வகை ஸ்மார்ட் பைக் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. ஃபிட்னஸ் பைக் மற்றும் ஸ்மார்ட் டெஸ்க் என்ற கருத்தை ஒன்றிணைத்து ஒரு புதிய வகை டெஸ்க் பைக்கை உருவாக்கி உள்ளது. இந்த டெஸ்க் பைக்கை பெடல் செய்வதன் மூலம் மின்சாரம் உருவாக்கி லேப்டாப் மற்றும் ஸ்மார்ட்போன்களை சார்ஜ் செய்து கொள்ளலாம்.
இது Peloton பைக்கும் இல்லை, ஸ்மார்ட் டெஸ்க்கும் இல்லை மாறாக, இது இரண்டின் கலவையாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment
publive-image

eKinekt BD3 பைக்கை சைக்கிளிங் போல் பெடல் செய்யும் போது, Kinect எனர்ஜி உருவாகிறது. இந்த kinetic energy லேப்டாப், ஸ்மார்ட்போகளுக்கு நேரடி மின்சாரமாக பயன்படுத்தப்படுகிறது. ஒரு மணி நேரம் தொடர்ந்து சைக்கிளிங் செய்தால் 75 வாட்ஸ் (watts) power உருவாகிறது என ஏசர் தெரிவித்துள்ளது.

எல்சிடி டிஸ்ப்ளே மற்றும் ஆப் மூலம் உங்கள் progress பற்றி தெரிந்து கொள்ளலாம். real-time progress, தூரம், வேகம் மற்றும் கலோரிகள் பற்றி தெரிந்து கொள்ளலாம். ஏசர் eKinekt BD3 இரண்டு வகையாக பயன்படுத்தலாம்.

Working mode மற்றும் Sports mode-இல் பயன்படுத்தலாம். Working mode-இல் பயன்படுத்தும் போது டெஸ்க்கை அருகில் வைத்து அதன் மீது லேப்டாப் வைத்து பெடல் செய்து பயன்படுத்தலாம். Sports mode-இல் பயன்படுத்தும் போது பைக்கை கொஞ்சம் தூரம் வைத்து leg space விட்டு பெடல் செய்யலாம், இந்த பைக் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து தயாரிக்கப்பட்டுள்ளது .

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment