சூரியனின் லெக்ராஞ்சியன் புள்ளி எனப்படும் எல்.1-ஐ நோக்கி இந்தியாவின் ஆதித்யா விண்கலம் இன்று (செப்.19) அதிகாலை 2 மணிக்கு இஸ்ரோ விஞ்ஞானிகளால் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. புவி சுற்றுவட்டப் பாதையில் இருந்து பிரிந்து சூரியனின் லெக்ராஞ்சியன் புள்ளி எல்.1 புள்ளிக்கு ஆதித்யா விண்கலம் இன்று செலுத்தப்பட்டது. இந்த பாதையில் விண்கலம் 110 நாட்கள் பயணம் செய்து எல்.1 புள்ளியை அடையும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சூரியனை ஆய்வு செய்வதற்கான இந்தியாவின் ஆதித்யா எல்.1 விண்கலம் கடந்த செப்.2-ம் தேதி பி.எஸ்.எல்.வி சி 57 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. ஆதித்யா எல்.1 விண்கலம் பூமியிலிருந்து சுமார் 1.5 மில்லியன் கிமீ தொலைவில் அமைந்துள்ள சூரியன்-பூமி லாக்ராஞ்சியன் புள்ளி எல்.1 புள்ளிக்கு அனுப்பபடுகிறது. இந்த புள்ளியில் விண்கலம் ஒளிவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டு சூரியனை ஆய்வு செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் முதல் விண்வெளி அடிப்படையிலான ஆய்வகம் ஆகும்.
இந்நிலையில் தற்போது விண்கலம் புவி சுற்றுவட்டப் பாதையில் இருந்து பிரிந்து எல்.1 புள்ளியை நோக்கிய பாதைக்கு வெற்றிகரமாக மாற்றப்பட்டுள்ளது. இது குறித்து இஸ்ரோ கூறுகையில், சன்-எர்த் எல்.1 புள்ளியை நோக்கி விண்கலம்! இன்று விண்கலத்தை Trans-Lagrangean Point 1 Insertion (TL1I) செய்யும் முயற்சி வெற்றிகரமாகச் செய்யப்படுகிறது.
விண்கலம் இப்போது சூரியன்-பூமி எல்.1 புள்ளிக்கு எடுத்துச் செல்லும் பாதையில் உள்ளது. இது சுமார் 110 நாட்களுக்குப் பிறகு ஒரு சுற்றுப்பாதை உயர்வு மூலம் எல்.1 பாதையில் செலுத்தப்படும். ஒரு பாதையில் உள்ள ஒரு பொருளை மற்றொரு வான உடல் அல்லது விண்வெளியில் உள்ள இடத்திற்கு மாற்றும் முயற்சியை இஸ்ரோ தொடர்ச்சியாக 5-வது முறையாக வெற்றிகரமாக செய்துள்ளது எனக் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“