ஆதித்யா எல்.1 விண்கலத்தின் 4-வது மற்றும் கடைசி பூமி சுற்றுப்பாதை உயர்வு நேற்று (வெள்ளிக்கிழமை) வெற்றிகரமாக செய்யப்பட்டது. சூரியனை ஆய்வு செய்வதற்கான இந்தியாவின் ஆதித்யா எல்.1 விண்கலம் பூமியில் இருந்து 1.5 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் விண்வெளியில் உள்ள எல்.1 புள்ளியில் நிலை நிறுத்தப்பட்டு சூரியனை ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
சந்திரயான்-3 விண்கலத்தைப் போலவே இதுவும் பூமி சுற்றுப்பாதை உயர்வு செய்யப்பட்டது. படிப்படியாக பூமி சுற்றுப்பாதை உயர்தப்பட்ட நிலையில் நேற்று 4-வது முறையாக மற்றும் கடைசி முறையாக சுற்றுப்பாதை வெற்றிகரமாக உயர்த்தப்பட்டது. தொடர்ந்து செவ்வாய் கிழமை (செப்.19) பூமி சுற்றுப்பாதையை நிறைவு செய்யும் விண்கலம் அதன் இலக்கான எல்.1 புள்ளிக்கு அன்றே செலுத்தப்பட உள்ளது.
https://indianexpress.com/article/technology/science/india-solar-mission-aditya-l1-set-to-leave-earth-orbit-tuesday-8941229/
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) விஞ்ஞானிகள் செவ்வாய்கிழமை அதிகாலை 2 மணிக்கு டிரான்ஸ்-லக்ராஞ்சியன் பாயின்ட் 1 இன்செர்ஷனை (TL1I) பணியை மேற்கொள்வார்கள். 4-வது சுற்றுப்பாதை உயர்த்தப்பட்ட பின் விண்கலம் இப்போது 256 கி.மீ x 1,21,973 கி.மீ என்ற அளவில் நீள்வட்ட சுற்றுப்பாதையில் உள்ளது.
விண்கலம் எல்.1 புள்ளிக்கு ஏறக்குறைய நான்கு மாதங்கள் பயணித்த பிறகு, வேறு எந்த இந்திய விண்கலமும் இதுவரை கடக்காத தூரத்தை கடந்து, சூரிய ஆய்வகம் L1 புள்ளியைச் சுற்றி ஒரு ஒளிவட்டப் பாதையில் (halo orbit) தன்னை நிறுத்தி 7 பேலோடுகளைக் கொண்டு சூரியனை ஆய்வு செய்யும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“