Advertisment

224 நாட்களுக்கு தினம் 1.5 ஜி.பி. டேட்டா இலவசம்! அதிரடி சலுகை அறிவிப்பு

ஏர்டெல் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, புதிய பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1.5 ஜி.பி. இலவச டேட்டா 224 நாட்களுக்கு வழங்கப்படுகிறது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Airtel 4G hotspot bundles free 1.5GB daily data for 224 days - 224 நாட்களுக்கு தினம் 1.5 ஜி.பி. டேட்டா இலவசம்! அதிரடி சலுகை அறிவிப்பு

Airtel 4G hotspot bundles free 1.5GB daily data for 224 days - 224 நாட்களுக்கு தினம் 1.5 ஜி.பி. டேட்டா இலவசம்! அதிரடி சலுகை அறிவிப்பு

ஏர்டெல் 4ஜி ஹாட்ஸ்பாட் சாதனத்தை வாங்கும் புதிய வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1.5 ஜி.பி. டேட்டாவினை 224 நாட்களுக்கு வழங்குவதாக பாரதி ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.

Advertisment

இந்த புதிய சலுகை புதிய பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. முன்னதாக ஏர்டெல் 4ஜி ஹாட்ஸ்பாட் வாங்கும் போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 1000 கேஷ்பேக் வழங்குவதாக அறிவித்தது. தற்சமயம் கூடுதல் சலுகை பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது.

இந்நிலையில், ஏர்டெல் வெளியிட்டுள்ள புதிய பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1.5 ஜி.பி. இலவச டேட்டா 224 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. 4ஜி ஹாட்ஸ்பாட் சாதனத்தில் ஏர்டெல் சிம் போட்ட 48 மணி நேரத்தில் கூடுதல் டேட்டா பயனர் கணக்கில் சேர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஏர்டெல் நிறுவனம் 4ஜி ஹாட்ஸ்பாட் வாங்குவோருக்கு 84 நாட்களுக்கு 1.5 ஜி.பி. டேட்டா வழங்குவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Airtel
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment