பார்தி ஏர்டெல் அதன் நெட்வொர்க்கில் 1 மில்லியன் (10 லட்சம்) தனித்துவமான 5G பயனர்களைக் கடந்துள்ளதாக அறிவித்துள்ளது.
அந்த வகையில் ஏர்டெல் 5ஜி வணிக ரீதியாக தொடங்கப்பட்ட 30 நாட்களுக்குள் இந்த மைல்கல்லை எட்டியுள்ளது.
முன்னதாக, டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், சிலிகுரி, நாக்பூர் மற்றும் வாரணாசி ஆகிய நகரங்களில் ஏர்டெல் தனது 5ஜி சேவையை இந்த மாத தொடக்கத்தில் அறிமுகப்படுத்தியது.
டெல்கோ நிறுவனம் அதன் நெட்வொர்க்கை உருவாக்கி அதன் செயல்பாட்டை நிறைவு செய்து வருவதால், இந்த நகரங்களில் அதன் 5G சேவைகளை படிப்படியாக அறிமுகப்படுத்துகிறது.
இது குறித்து பார்தி ஏர்டெல் சிடிஓ ரந்தீப் செகோன் கூறுகையில், “வாடிக்கையாளர்களின் ஆர்வம், ஒத்துழைப்பு ஊக்கமளிக்கிறது. எல்லா 5ஜி சாதனங்களும் இப்போது ஏர்டெல் 5ஜி பிளஸ் நெட்வொர்க்கில் வேலை செய்யும் திறன் பெற்றிருந்தாலும், சில விதிவிலக்குகளைத் தவிர்த்து, எங்கள் நெட்வொர்க் ஒவ்வொரு நாளும் கட்டமைக்கப்பட்டுவருகிறது.
நாடு முழுக்க இணைக்கும் வகையில் 5ஜி தொழில்நுட்ப சேவையை விரிவுப்படுத்த முன்னெடுத்துச் செல்வோம்” என்றார்.
ஏர்டெல் அதன் 5G சோதனையை 2021 இல் தொடங்கியது. 5G ஸ்மார்ட் போன்களைக் கொண்ட வாடிக்கையாளர்கள், அதிவேக ஏர்டெல் 5G பிளஸைப் பயன்படுத்த முடியும்.
2023 ஆம் ஆண்டில் அனைத்து நகர்ப்புற நகரங்களையும் இணைப்பதற்கு இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதிவேக அழைப்பு இணைப்பு ஆகியவற்றுடன் ஏர்டெல் 5G சேவைகள் இன்றைய வேகத்தை விட 20 முதல் 30 மடங்கு அதிக வேகத்தை வழங்குவதாகக் கூறப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil